சனிக்கிழமை, பிப்ரவரி 8, 2025

அஜித்துக்கு ஜோடின்னு சொல்லி சிறுத்தை சிவா ஏமாத்திட்டாரு.. வீரம் படத்தால் என் கேரியரே போய்டுச்சு!

Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் வீரம் படத்தில் நடித்ததால் தன்னுடைய சினிமா கேரியரே போய்விட்டதாக மனோ சித்ரா பேட்டி கொடுத்திருக்கிறார்.

அஜித்துக்கு பல வருடங்களுக்குப் பிறகு அமைந்த குடும்பத் திரைப்படம் தான் வீரம். விஜய்யின் ஜில்லா படத்துடன் ரிலீஸ் ஆகி பெரிய அளவில் வெற்றி பெற்றது.

அண்ணன் தம்பிகளின் பாசம், அடிதடி சண்டை, காதல் என படம் மசாலா திரைப்படமாக வெளியானது. அஜித் மற்றும் தமன்னாவின் கெமிஸ்ட்ரி பெரிய அளவில் பேசப்பட்டது.

சிறுத்தை சிவா ஏமாத்திட்டாரு

படம் ரிலீஸ் ஆகி கிட்டதட்ட 10 வருடங்களுக்கும் மேலான நிலையில் நடிகை மனோ சித்ரா இயக்குனர் சிவா மீது குற்றம் சாட்டியிருக்கிறார்.

சிறுத்தை சிவா அவரிடம் கதை சொல்லும் போது அஜித்துக்கு ஜோடி என்று சொல்லி இருக்கிறார். தமன்னா முதலில் ஜோடியாக நடித்தாலும் ஒரு காட்சியில் அவர் இறந்து விடுவார்.

அதன் பின்னர் நீங்கள் அஜித்துடன் ஜோடியாக இணைவீர்கள் என்று சொல்லி இருக்கிறார்.

ஆனால் படப்பிடிப்புக்கு வந்த மூன்று நாளில் தான் என்ன நடக்கிறது என்பதை மனோ சித்ரா கண்டுபிடித்திருக்கிறார்.

தன்னிடம் மட்டுமில்லாமல் அந்த படத்தில் அஜித்தின் தம்பிகளுக்கு ஜோடியாக நடித்த அபிநயா மற்றும் சூசனிடமும் இப்படித்தான் கதை சொல்லி அழைத்து வந்திருக்கிறார்.

இது தெரிந்த மனோ சித்ரா ரொம்பவும் டென்ஷன் ஆகி உடனே ஷூட்டிங் ஸ்பாட்டை விட்டு கிளம்பினாராம். அழுது புலம்பிய அவரை சமாதானம் பண்ணி சிறுத்தை சிவா இந்த படத்தில் நடிக்க வைத்திருக்கிறார்.

அஜித்துக்காக இந்த படத்தை நடித்து முடித்துக் கொடுத்ததாக மனோ சித்ரா பேட்டியில் சொல்லி இருக்கிறார். அதன் பிறகு தான் தன்னை இரண்டாவது கதாநாயகியாக நிறைய படங்களில் கேட்க ஆரம்பித்ததாகவும் குற்றம் சாட்டி இருக்கிறார்.

Trending News