Allu Arjun: வாரிசு நடிகர் ஒருவர் தெலுங்கு சினிமாவில் நடக்கும் பெரிய மாஃபியா பற்றி நேரலையில் மனம் திறந்து பேசி இருக்கிறார். பாலிவுட் சினிமாவை பொறுத்த வரைக்கும் அங்கு நெப்போடிசம் அதிகம்.
நெப்போ கிட்ஸ் களுக்கு தான் தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்கும். பிரபல நடிகர் சுஷாந்த் மரணம் கூட இந்த லெப்போ கலாச்சாரத்தால் தான் நடந்தது என்று சொல்வார்கள்.
இதையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு தெலுங்கு சினிமாவில் ஒரு சதி நடந்து வருகிறது. இதைப்பற்றி மனம் திறந்து இருப்பவர் நாகார்ஜுனாவின் மகன் பிரபல நடிகர் நாக சைதன்யா.
அல்லு அர்ஜுன் சிக்குனது அப்படிதான்
அதாவது தெலுங்கு சினிமாவை பொருத்தவரைக்கும் ஹீரோக்களுக்கு PR டீம் சமூக வலைதளத்தில் இருக்கிறது.
தங்களுக்கு போட்டியான ஹீரோவின் படம் ரிலீஸ் ஆகும்போது இந்த குழு இறங்கி வேலை செய்கிறதாம்.
அதாவது அந்த ஹீரோவை பற்றி என்னென்ன நெகட்டிவ் கமெண்ட்கள் பரப்ப முடியுமோ அதை செய்து விடுகிறார்கள்.
புஷ்பா படத்தின் வெற்றியால் அல்லு அர்ஜுன் இந்திய சினிமா ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானார்.
புஷ்பா 2 ரிலீஸ் போது நடந்த அசம்பாவிதத்தை பெரிய அளவில் நெகட்டிவ் ஆக்கியது இந்த டீம் தான் என்பது போல் நாக சைதன்யா பேசியிருக்கிறார்.
மேலும் இன்னொருவரின் படத்தை மிதித்து தான் மேலே வர வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை என்றும் பேசி இருக்கிறார்.