Vignesh Shivan: நடிகர் தனுஷை வெறுப்பேத்துகிறேன் என்ற பெயரில் காதல் மனைவி நயன்தாராவை கடுப்பேற்றி இருக்கிறார் விக்னேஷ் சிவன்.
நயன்தாரா மற்றும் விக்கி ஜோடி சமீப காலமாக கால் வைக்கும் இடம் எல்லாம் கன்னிவெடி தான். அதிலும் விக்னேஷ் சிவன் வாயை திறந்தாலே வச்சு செய்யணும்னு நெட்டிசன்கள் முடிவு செய்து விட்டார்கள் போல.
ஒரு சில மாதங்களாக சைலன்ட் மோடிலிருந்த விக்கி நேற்று டிராகன் பட வெளியீட்டு விழாவில் மனம் திறந்து பேசி இருந்தார்.
நயனை காண்டாக்கிய விக்கி
இந்த படத்தில் இவர் எழுதிய தீமா பாடல் பெரிய அளவில் இணையதளத்தில் வைரலானது.
இது குறித்து பேசும்பொழுது தனக்கு பாடல் எழுத ஊக்குவித்தது சிம்பு தான் என்றும், அவர் சொன்ன அட்வைஸை இன்றுவரை பின்பற்றி வருகிறேன் என்றும் பேசி இருந்தார்.
நயன்தாராவுடன் காதல் மற்றும் திருமணத்திற்கு பிறகு விக்கி எந்த இடத்திலும் தன்னுடைய முதல் பட ஹீரோ சிம்பு பற்றி பேசியதே இல்லை.
தனுஷை வெறுப்பேற்ற சிம்புவை புகழ்ந்து பேசி இருக்கிறார்.
எப்படி பார்த்தாலும் சிம்பு நயன்தாராவின் எக்ஸ் என்பதால் நெட்டிசன்கள் லேடிஸ் சூப்பர் ஸ்டாரை மீண்டும் சிம்புவை வைத்து கலாய்க்க ஆரம்பித்திருக்கிறார்கள் சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்து இருக்கிறார் விக்கி.