Ameer-Pavani: ஆரவ் – ஓவியா, கவின் – லாஸ்லியா ஜோடிகளுக்கு பிறகு பிக் பாஸில் காதல் கன்டென்ட் வந்தாலே பார்க்க எரிச்சலாக இருக்கும்.
இதற்கு காரணம் இவர்கள் உள்ளே தங்களை தக்க வைத்துக் கொள்ள இந்த காதல் நாடகத்தை அரங்கேற்றுவது தான்.
பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் பாவனி உள்ளே வந்த போது கண்டிப்பாக காதல் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
குட் நியூஸ் சொன்ன அமீர் பாவனி
அதுக்கு ஏற்ற மாதிரி அமீர் பாவனியை காதலிப்பதாகவும் அந்த வீட்டிற்குள் சொன்னார். நிகழ்ச்சி முடியும் வரை பாவனி அவர் மீது எந்த கவனமும் செலுத்திய மாதிரி தெரியவில்லை.
அதன் பின்னர் பிக் பாஸ் ஜோடியில் கலந்து கொண்ட போது ஒரு சில எபிசோடுகள் கழித்து அமீரின் காதலை ஏற்றுக் கொண்டார்.
அதன் பின்னர் இருவரும் லிவிங் டு கெதர் மூன்று வருடங்களாக வாழ்ந்து வந்தார்கள். பாவனைக்கு ஏற்கனவே திருமணம் ஆகி அவருடைய கணவர் தற்கொலை செய்து இறந்து விட்டார்.
இதனாலேயே பாவனி மீது ஒரு நெகட்டிவ் விமர்சனம் இருந்து கொண்டே வந்தது.
இந்த இரண்டு பேரும் எப்போது போஸ்ட் போட்டாலும் இந்த காதல் எத்தனை நாளைக்கு என்று கமெண்ட் செய்யாதவர்களே கிடையாது.
இந்த நிலையில் தங்களுக்கு எதிரான விமர்சனங்களுக்கு காதலர் தினத்தன்று தரமான பதிலடி கொடுத்திருக்கிறார்கள்.
அமீர் மற்றும் பாவனி 3 வருட காதல் வாழ்க்கைக்கு பிறகு வரும் ஏப்ரல் 24ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள். தற்போது இந்த ஜோடிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
![Ameer Pavani](https://www.cinemapettai.com/wp-content/uploads/2025/02/Screenshot-2025-02-15-094915-1024x595.png)