ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 23, 2025

சிங்கப்பெண்ணில் ஆனந்தியை சீண்டி பார்க்கும் மித்ரா.. திருடனுக்கு தேள் கொடிய நிலையில் வார்டன்

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. திருடனுக்கு தேள் கொட்டியது போல என்று சொல்வார்கள்.

அந்த நிலைமையில் தான் இப்போது வார்டன் மனோன்மணி இருக்கிறார். ஒரு பக்கம் அன்பு மற்றும் ஆனந்தி காதலை தெரிந்து கொண்ட பார்வதி தன்னுடைய சதி ஆட்டத்தை ஆரம்பித்து விட்டார்.

அதே நேரத்தில் இவர்கள் இருவரது காதலையும் தெரிந்து கொண்ட வார்டனால் நிலை கொள்ள முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

ஆனந்தியை சீண்டி பார்க்கும் மித்ரா

மகேஷுக்கு ஒரு அம்மாவாக இருந்து என்ன செய்வது என்றும் புரியவில்லை. அதே நேரத்தில் ஆனந்தியின் மனதை நோகடிக்கவும் வார்டனுக்கு விருப்பமில்லை.

இந்த நிலையில் இன்று வெளியாக இருக்கும் ப்ரோமோவில் மித்ரா ஆனந்தியை சீண்டி பார்க்கிறாள். அதாவது போன் கேமராவை ஆன் செய்து வைத்து விட்டு அழகனை பற்றி கிண்டலாக பேசுகிறாள்.

ஒரு கட்டத்தில் ஆனந்தி டென்ஷன் ஆகி அழகன் இல்லன்னு உனக்கு யார் சொன்னது என்று கோபமாக கேட்கிறாள். மேலும் வார்டனிடம் மகேஷ் சாருக்கு போன் பண்ணி இங்க வர சொல்லுங்க.

அவரிடம் நான் என்னோட காதலை பற்றி சொல்லப் போகிறேன் என ரொம்ப கோபமாக சொல்கிறாள். அதே நேரத்தில் வார்டனுக்கு மகேஷும் போன் பண்ணுகிறான். வார்டன் மகேஷ் ஹாஸ்டலுக்கு வர சொல்கிறாரா என இன்றைய எபிசோடில் பார்க்கலாம்.

Trending News