Dhanush: தனுஷ் மற்றும் ஜிவி பிரகாஷ் நெருங்கிய நண்பர்கள் என்று தெரிந்த எல்லோருக்குமே அவர்களுக்கு இடையே ஏற்பட்ட விரிசலும் தெரிந்திருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.
2007 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன பொல்லாதவன் படத்தின் மூலம் இவர்களுடைய பயணம் தொடங்கி பல ஆண்டுகள் நீடித்தது.
திடீரென இருவரும் ஒன்றாக இணைந்து வேலை செய்வதை நிறுத்திக் கொண்டார்கள். அதன் பின்னர் பல வருடங்கள் கழித்து வெற்றிமாறன் தான் மீண்டும் இவர்களை இணைத்து வைத்தது.
பேசாமல் இருந்த தனுஷ்-ஜிவி பிரகாஷ்
இவர்களுக்குள் நடந்த பிரச்சனை என்பது இருவருக்குமே சுயமரியாதை சம்பந்தப்பட்டது. பிரபல பத்திரிக்கை ஒன்று நடிகர்களுக்கு விருது வழங்கும் விழாவை ஏற்பாடு செய்து இருக்கிறது.
அதில் பணிபுரிந்த ஒருவர் ஜிவி பிரகாஷின் நெருங்கிய நண்பர். வேறொரு நடிகருக்கு ஓட்டுக்கள் அதிக அளவில் கிடைக்கும் அவரால் அந்த விருது விழாவில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை.
உடனே தனுஷ் தான் வெற்றி பெற்றார் என்று ஓட்டு எண்ணிக்கையை அந்த நிறுவனம் மாற்றி இருக்கிறது.
இது ஜிவி பிரகாசுக்கு தெரிய வர தனுஷ் நண்பரா இருந்தாலும் பரவாயில்லை என்று அந்த பத்திரிகை நிறுவனத்தின் சுயநலமான வேலையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார்.
இதனால் தான் இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தது. அதன் பின்னர் ஜிவி பிரகாஷ் தனுஷ் ரசிகர்களால் சமூக வலைதள பக்கங்களில் அதிக அளவு அவமானத்தை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

