Naasar: தமிழ் சினிமாவிலும் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் என்பது கொஞ்சம் அதிகமாக தான் இருக்கிறது.
பல வருடங்களாக கஷ்டப்பட்டு சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை நிலை நிறுத்தியவர்களால் இதை கொஞ்சம் தாங்கிக் கொள்ளத்தான் முடியவில்லை.
அதற்கு உதாரணம் தான் நடிகர் நாசர் பற்றிய சம்பவம். நாசர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை என்று சொல்லலாம். கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கும் மேலாக சினிமாவில் தன்னை நிலை நிறுத்தி வருகிறார்.
நடிகரை வெளுத்து விட்ட நாசர்
அவருக்கு திடீரென தயாரிப்பாளரின் பையன் என சொல்லிவிட்டு ஹீரோவான வரை பார்த்தால் எப்படி இருக்கும். அந்த ஹீரோ வேறு யாருமில்லை ஜீவா தான்.
ஆசை ஆசையாய் படப்பிடிப்பில் நாசர் ஜீவாவிடம் முகம் கொடுத்து கூட பேச மாட்டாராம். ஒருமுறை நாசர் வசன பேப்பரை கையில் வைத்து மனப்பாடம் செய்து கொண்டிருந்திருக்கிறார்.
அப்போது ஜீவா என்ன சார் இன்னைக்கு டயலாக் அதிகமா என்று கேட்டாராம். உடனே நாசர் நீ ஹீரோ ஆயிட்ட சரி அதுக்கு உன்ன சரியா தயார் படுத்திக்க வேண்டி தானே என்று கேட்டிருக்கிறார்.
அதற்கு ஜீவா அவங்க சொல்ற டயலாக்கை நான் அப்படியே பேசி நடிக்கிறேன் சார் அவ்வளவுதான் என்று சொல்லி இருக்கிறார்.
உடனே என் ஆசை ப்ரொடியூசர் பையன் என்று அப்படியே ஹீரோவா நடிக்க வந்துட்டியா என கோபமாக கேட்டாராம். இதை ஜீவா தன்னுடைய சமீபத்திய பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.