Dhanush: நடிகை ஈஸ்வரி ராவை அவ்வளவு சீக்கிரம் தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாது.
சினிமாவில் ஹீரோயின் ஆக வேண்டும் என்று உள்ளே நுழைந்து பின்னர் சின்னத்திரையிலும் தனக்கான அடையாளத்தை ஏற்படுத்தியவர்.
ராமன் அப்துல்லா படத்தில் வரும் மருதாணி அரைச்சு வச்சேன் பாட்டு கேட்கும் போதெல்லாம் ஈஸ்வரியின் முகம் ஞாபகத்திற்கு வரும் என்பதுதான் நிதர்சனமான உண்மை.
ஈஸ்வரி ராவை நியாபகம் இருக்கா?
அதே போன்று பிரசாந்த் மற்றும் சினேகா நடித்த விரும்புகிறேன் படத்தில் ஈஸ்வரி ராவ் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருப்பார்.
அவர் நடித்த வெகுளித்தனமான அந்த கேரக்டருக்கு மாநில விருது கிடைத்தது. ஈஸ்வரி ராவை தமிழகம் எங்கும் கொண்டு சேர்த்தது கஸ்தூரி சீரியல் தான்.
கிட்டத்தட்ட கோபுரங்கள் சாய்வதில்லை படத்தின் கதைதான். இருந்தாலும் இவருடைய நடிப்பு பெரிய அளவில் கவனத்தை பெற்றது.
சிம்பு மற்றும் ஜோதிகா நடித்த சரவணா படத்தில் பிரகாஷ்ராஜின் மனைவியாக நடித்திருப்பார். அதேபோன்று தனுஷ் நடித்த சுள்ளான் படத்திலும் அவருக்கு அக்காவாக நடித்திருப்பார்.
அந்த படத்தில் தனுஷ் தன்னை ரஜினி என்ற ரசிகராக காட்டி இருப்பார். அதில் ஒரு காட்சியில் கதவில் ஒட்டப்பட்டு இருக்கும் ரஜினி போட்டோவுடன் தனுஷ் பேசிக் கொண்டிருப்பார்.
அப்போது அந்த போட்டோவை பார்க்கும் ஈஸ்வரி ராவிடம் என்ன என் தலைவரை கரெக்ட் பண்ணலாம் என்று பார்க்கிறாயா என்று கேட்பார்.
அதிலிருந்து கிட்டத்தட்ட 15 வருடங்கள் கழித்து தனுஷ் தயாரித்து ரஜினி நடித்த காலா படத்தில் அவருக்கு ஜோடியாக ஈஸ்வரி ராவை நடிக்க வைத்தார்.
காலா படத்தில் ஈஸ்வரி ராவ் நடித்த செல்வி கதாபாத்திரம் அந்தப் படத்தின் அடையாளமாகவே மாறிவிட்டது. ரஜினியுடன் ஜோடி சேர எத்தனையோ பேர் காத்திருக்க எதார்த்தமான இவரை அவருக்கு ஜோடியாக்கியது படத்தின் பெரிய வெற்றி.