Uma Riyaz: பிரபல நடிகை உமா ரியாஸ் அவர்களின் மகன் மற்றும் மருமகள் தங்களுடைய சந்தோஷமான தருணத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருக்கிறார்கள்.
உமா ரியாசின் மகன் ஷாரிக் பிக் பாஸ் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் எந்தவித நெகட்டிவிட்டியும் இல்லாமல் வெளியேறிய போட்டியாளர் என்று கூட இவரை சொல்லலாம்.
அதன் பின்னாடி இவருக்கு சினிமா பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் மரிய ஜெனிஃபர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
குட் நியூஸ் சொன்ன ஷாரிக்-மரியா தம்பதியினர்
இந்த திருமணத்திற்கு ரசிகர்களிடையே பெரிய அளவு நெகட்டிவிட்டி கிடைத்தது. இதற்கு காரணம் மரிய ஜெனிபருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிய குழந்தை இருப்பது தான்.
அத்தனை நெகட்டிவிட்டியையும் தாண்டி இந்த தம்பதியினர் தங்களுடைய சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
தற்போது மரியா கர்ப்பமாக இருப்பதாக இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார்கள். இந்த தம்பதியினருக்கு ரசிகர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
