திங்கட்கிழமை, பிப்ரவரி 24, 2025

சிங்கபெண்ணில் வார்டனை எதிர்க்கும் மகேஷ், சதியில் ஜெயித்த பார்வதி.. செவரக்கோட்டை செல்லும் அன்பு-ஆனந்தி

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய புரோமோ வெளியாகியிருக்கிறது.

அன்பு மற்றும் ஆனந்தி அடுத்த கட்டமாக என்ன செய்யப் போகிறார்கள் என்பது எல்லோருடைய பெரிய எதிர்பார்ப்பாகவும் இருந்தது.

இதற்கு இந்த வார எபிசோடுகள் விடை கொடுக்கப் போகின்றன. தில்லைநாதன் மகேஷிடம் அன்பு மற்றும் ஆனந்தி காதலை பற்றி சொல்லிவிட்டார்.

செவரக்கோட்டை செல்லும் அன்பு-ஆனந்தி

ஆனால் அப்பா சொல்லியும் மகேஷ் அதை கேட்பதாய் இல்லை. இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் நேரடியாக வார்டனிடம் வந்து மகேஷ் சண்டை போட்டுவிட்டு போய்விடுகிறான்.

ஹாஸ்டலுக்கு வரும் அன்பு மற்றும் ஆனந்தியிடம் வார்டன் நடந்த எல்லாவற்றையும் பற்றி சொல்கிறார். உடனே ஆனந்தி மேடம் நீங்க ஆரம்பிச்சு வச்சத நீங்களே முடித்து விடுங்கள் என்று சொல்கிறாள்.

ஆனந்தியின் பேச்சை கேட்டு வார்டனும் அன்பு மற்றும் ஆனந்தியுடன் செவரக்கோட்டைக்கு கிளம்புகிறார்.

அதே நேரத்தில் வேலு இவர்கள் இருவரது காதலையும் சேர்த்து வைக்கிறேன் என சத்தியம் செய்கிறான்.

வேலு மற்றும் வார்டன் இருவரும் சேர்ந்து அன்பு மற்றும் ஆனந்தியின் காதலுக்கு நல்லது செய்கிறார்களா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Trending News