Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அன்பு மற்றும் ஆனந்திக்கு யார் தான் உதவி செய்யப் போகிறார் என்ற சந்தேகம் எல்லோருக்குமே இருந்தது.
ஆனந்தியின் அண்ணன் வேலு இவர்களுடைய காதலுக்கு உதவுகிறேன் என்று சொன்னாலும் அவன் பேச்சை அழகப்பன் கேட்க வாய்ப்பே கிடையாது.
இந்த நிலையில் தான் இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் அன்புவின் அம்மா லலிதா ஆனந்திக்கு போன் பண்ணுகிறார்.
சூழ்ச்சியை ஆரம்பிக்கும் பார்வதி-மித்ரா!
ஆனந்தி வருங்கால மாமியாரிடம் என்ன நடந்தது என்பதை புட்டு புட்டு வைக்கிறாள். அதே நேரத்தில் வார்டன் தில்லைநாதனுக்கு போன் பண்ணுகிறார்.
ஆனால் அந்த போனை மகேஷ் எடுத்து விடுவது போல் காட்டப்படுகிறது. இன்னொரு பக்கம் அன்பு மற்றும் ஆனந்தி செவரக்கோட்டைக்கு போக இருப்பதை மித்ரா மகேஷின் அம்மா பார்வதியிடம் சொல்கிறார்.
உடனே பார்வதி சந்தோஷமான விஷயம் தானே என்று சொல்கிறார். ஆனால் மித்ரா அன்பு மற்றும் ஆனந்தி செவரக்கோட்டைக்கு சென்று திருமணத்தைப் பற்றி பேசக்கூடாது.
அப்படி பேசினால் நம்முடைய திட்டம் நிறைவேறாது என்று சொல்கிறாள். இதனால் அன்பு மற்றும் ஆனந்தியை அடுத்த கட்ட திட்டத்தை மித்ரா மற்றும் பார்வதியை இணைந்து சூழ்ச்சி செய்து கெடுக்கப் போகிறார்கள் என்பது உறுதியாகிவிட்டது.