வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 28, 2025

சூர்யாவுடன் மோத நாள் குறித்த விக்ரம்.. படமும் தரம், சம்பவமும் தரமா இருக்கும்!

Suriya-Vikram: சம்பவம் தரமா இருக்கணும்னு சொல்லுவாங்க. இப்படி ஒரு விஷயம் தான் தமிழ் சினிமாவில் நடக்க இருக்கிறது.

குறிப்பிட்ட காலகட்டம் வரை விக்ரம் மற்றும் சூர்யாவுக்கு நடுவே படங்கள் ரிலீஸ் போது பயங்கர போட்டி இருக்கும். கிட்டத்தட்ட 20 முறை இவர்களின் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகி இருக்கிறது .

விஜய் அஜித்துக்கு பிறகு சூர்யா மற்றும் விக்ரம் தான் அடுத்த கட்ட ஹீரோக்களாக இருந்தார்கள். அதன் பின்னர் இருவரது பாதைகளுமே வேறு வேறு என்று ஆகிவிட்டது.

சூர்யாவுடன் மோத நாள் குறித்த விக்ரம்

இந்த நிலையில் மீண்டும் ஒரு முறை சூர்யா மற்றும் விக்ரம் படங்கள் மோத இருக்கிறது. சூர்யாவுக்கு தொடர் தோல்விகளுக்கு பிறகு அவர் பெரிய அளவுக்கு நம்பி இருப்பது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வரும் ரெட்ரோ படம் தான்.

இந்த படம் வரும் மே மாதம் மூன்றாம் தேதியை ரிலீஸ் ஆகும் என்று செய்திகள் வெளியாகி இருக்கிறது.

இந்த நிலையில் விக்ரம் நடித்து பல வருடங்களுக்கு ரிலீஸ் ஆகாமல் தள்ளி போடப்பட்டிருந்த துருவ நட்சத்திரம் படத்தையும் இந்த தேதியில் தான் ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள்.

இந்த படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்பது தமிழ் சினிமா ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது. இந்த போட்டியில் ஜெயிக்கப் போவது ரெட்ரோவா அல்லது துருவ நட்சத்திரமா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Trending News