சிம்பு தன்னுடைய பிறந்தநாளில் அடுத்தடுத்து மூன்று படங்களின் அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். இந்த படங்கள் எப்பொழுது அறிவிக்கப்படும் என்று தெரியவில்லை. இதற்கு இடையே கையில் வந்து விழுந்த ப்ராஜெக்ட் ஒன்றை உதாசீனப்படுத்தியுள்ளார் சிம்பு.
மலையாளத்தில் மாஸ் இயக்குனராக வலம் வருபவர் ஜூட் ஆண்டனி ஜோசப். இவர்தான் 2018 என்ற சூப்பர் ஹிட் படத்தை எடுத்தவர். சிம்புவை பார்த்து இவர் ஒரு கதை கூறியுள்ளார். அந்தப் படத்தை வேல்ஸ் நிறுவனம் ஐசரி கணேஷ் தயாரிப்பதாக இருந்தது. அந்த படத்திற்கு சிம்பு கேட்ட சம்பளம் தான் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
அந்த படத்திற்கு சுமார் 25 கோடிகள் சம்பளம் கேட்டுள்ளார். இதனால் இந்த ப்ராஜெக்ட் வேறு ஒரு ஹீரோக்கு இப்பொழுது மாறிவிட்டது. உண்மையில் அந்த கதை சிம்புவிற்கு ரொம்ப பிடித்துப் போனதாம். எப்படியாவது அதை பண்ண வேண்டும் என இருந்தவர் பேராசையால் வீணடித்து விட்டார்.
இப்பொழுது இந்த கதைக்கு ஆர்யாவை தேர்ந்தெடுத்துள்ளார் இயக்குனர் ஜோசப். நந்தனத்தில் உள்ள வேல்ஸ் நிறுவனத்தின் ஆபீசில் இருவரும் சந்தித்துக் கொண்டு இதை உறுதி செய்துள்ளனர். வேல்ஸ் நிறுவனமும் இதை தயாரிக்க முழுமனதோடு இருக்கிறது.
இப்படி சிம்பு கிடைக்கிற ப்ராஜெக்டை எல்லாம் தன்னுடைய பேராசையால் வீணடித்து வருகிறார். இப்பொழுது அவர் கையில் மூன்று படங்கள் இருப்பதால் கெத்து காட்டி வருகிறார். மணிரத்தினம் படம் தக்லைஃப் நடிப்பதாலும் அடுத்தடுத்து பல படங்களை கமிட் செய்ததாலும் சிம்பு இப்படி தெனாவட்டு காட்டி வருகிறார்.