Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலில் அடுத்த வாரம் எபிசோடுகளுக்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.
காரணம் ஆனந்தியின் ஹாஸ்டல் வார்டன் மனோன்மணி தனக்கும் மகேசுக்கும் இடையே நடந்த பிளாஷ்பேக் பற்றி சொல்ல இருக்கிறார்.
மிகப்பெரிய பணக்காரர் தில்லைநாதனின் மகனாக இருப்பதால்தான் மகேஷுக்கு எந்த ஒரு தோல்வியையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலை இல்லை.
இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு?
ஒரு கட்டத்தில் மனோன்மணி தான் தன்னுடைய தாய் என்று தெரிந்து கொள்ளும்போது கண்டிப்பாக மகேஷின் மனம் மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
வார்டன் யாரிடம் தன்னுடைய ஃபிளாஷ்பாக்கை சொல்லப் போகிறார் என கடந்த சில மாதங்களாகவே பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
கடைசியில் அவர் சொல்ல இருப்பது அன்பு, ஆனந்தி மற்றும் அன்புவின் அம்மா லலிதாவிடம். அன்பு மற்றும் ஆனந்திக்கு இந்த உண்மை தெரிந்து எந்த பிரயோஜனமும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
இந்த விஷயம் மகேஷ் சாருக்கு தெரிஞ்சா அவர் மனசு கஷ்டப்படுவார் என இவர்கள் இந்த விஷயத்தை தெரியப்படுத்த மாட்டார்கள்.
அதே நேரத்தில் அன்புவின் அம்மாவின் பேச்சைக் கேட்காமல் இருவருமே அந்த கம்பெனிக்கு வேலைக்கு போகவும் தயாராக இருக்கிறார்கள்.
இதனால் இந்த முக்கோண காதல் கதையை முடிவுராமல் மீண்டும் இவர்களின் கண்ணாமூச்சி ஆட்டம் ஆரம்பிப்பது உறுதி.