
Ilayaraja: இளையராஜா சமீப காலமாக நடந்து கொள்ளும் விதத்தை பார்க்கும் பொழுது அவரை அப்படியே அமைதியாய் விட்டு விடுங்கள் என்றுதான் ரசிகர்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.
இளையராஜா லண்டனில் நடக்கவிருக்கும் சிம்போனி இசை விழாவுக்காக நேற்று லண்டன் புறப்பட்டார். அப்போது சென்னை விமான நிலையத்தில் அவரிடம் பத்திரிகையாளர்கள் பேட்டி எடுத்தனர்.
அப்போது பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு இளையராஜா பதில் சொன்ன விதம் சர்ச்சையாக இருந்தது.
லண்டனில் உங்களுடைய சிம்போனி நிகழ்ச்சியை நடத்துவதை எப்படி பார்க்கிறீர்கள் என்று கேட்டதற்கு, உனக்கு சந்தோஷமா இருக்குதா, நான் இந்தியாவின் பெருமை இன்கிரடிபிள் இந்தியா என்பது போல் நான் இன்கிரடிபிள் இளையராஜா. இனி என்னை மாதிரி வரவும் இல்லை வரப் போவதுமில்லை என்று பதிலளித்திருக்கிறார்.
மேலும் தேனிசைத் தென்றல் தேவா தன்னுடைய பாட்டுக்களை யார் வேண்டுமானாலும் உபயோகித்துக் கொள்ளலாம். அதற்கு காப்புரிமை தேவை இல்லை என்று சொல்லி இருக்கிறாரே என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு இளையராஜா ரொம்பவே கோபப்பட்டு விட்டார். இந்த மாதிரி தேவையில்லாத கேள்வி எல்லாம் என்கிட்ட கேட்காதே என்று பதிலளித்திருக்கிறார். பத்திரிக்கையாளர்களை ஒருமையில் பேசிய விதம், பதில் அளித்த விதம் ரசிகர்களுக்கு ஒரு வித வருத்தத்தை அளித்திருக்கிறது.