
Dhanush: ஒரு படத்தை வெற்றியா தோல்வியா என தம்பட்டம் அடிப்பது தற்போது சமூக வலைத்தளத்தில் பெரிய அளவில் மாஃபியா போல் நடந்து வருகிறது.
இதில் சமீபத்தில் சிக்கியவர் தான் நடிகர் தனுஷ். நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் மற்றும் டிராகன் படங்கள் ஒரே நாளில் மோதியது.
இதில் டிராகன் படம் தான் பெரிய அளவில் வெற்றி பெற்றது என்று சமூக வலைதளத்தில் முடிவும் எடுக்கப்பட்டது.
NEEK பட உண்மை நிலவரம் இதுதான்
அது மட்டும் இல்லாமல் தனுஷுக்கு இனி பிரதீப் ரங்கநாதன் தான் போட்டி என்று கூட சொல்லப்பட்டது. இது குறித்து தயாரிப்பாளர் தனஞ்செயன் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.
தனுஷ் இயக்கி தயாரித்த நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் பட்ஜெட் ரொம்பவும் கம்மி. தனுஷ் திட்டமிட்டு தான் இந்த படத்தின் கதையாக இருக்கட்டும், பட்ஜெட் ஆக இருக்கட்டும் எல்லாவற்றையும் செய்தார்.
அவருக்கு அவருடைய அக்கா மகனை ஹீரோவாக சினிமாவில் கொண்டு வர வேண்டும் என்பதுதான் ஆசை. . இதை தாண்டி நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமையிலேயே போட்ட பட்ஜெட்டை எடுத்து விட்டது.
இதன் பிறகு வந்த வசூல் எல்லாம் தனுஷுக்கு போனஸ் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் அவர் இந்த படத்திற்கு செலவு பண்ணிய பட்ஜெட் அவருடைய ஒரு படத்தின் சம்பள காசு தான் என சொல்லி இருக்கிறார்.