சிங்கப்பெண்ணில் மகேஷின் குழந்தையை சுமக்கும் ஆனந்தி.. சின்னாபின்னமாகும் அன்புவின் காதல்!

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய புரோமோ வெளியாகி இருக்கிறது. மகேஷின் மனதை மாற்றி எப்படியாவது காதலி ஜெயிக்க வேண்டும் என அன்பும் ஆனந்தியும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நேரத்தில் அவர்களின் தலையில் இடியை இறக்குவது போல் ஆனந்தியின் கர்ப்ப செய்தி வர இருக்கிறது. ஆனந்திக்கு சம்பளம் கம்மியாக கொடுத்ததற்காக அன்பு கம்பெனியில் இருக்கும் அனைவரையும் கூப்பிட்டு போராட்டம் நடத்தினான்.

சின்னாபின்னமாகும் அன்புவின் காதல்!

இது உச்சகட்ட பிரச்சனையாகி கருணாகரனுக்கும் அன்புக்கும் கைகலப்பு நடக்கிறது. அந்த நேரத்தில் அன்பு வை அடிப்பதற்கு மகேஷ் களமிறங்குவது போல் காட்டப்படுகிறது.

போதாத குறைக்கு இந்த பிரச்சனை நடந்து கொண்டிருக்கும் போதே ஆனந்தி மயக்கம் போட்டு விழுந்து விடுகிறாள்.

அவளை பதறிக் கொண்டு மருத்துவமனைக்கு அன்பு அழைத்து செல்வது போல் புரோமோ முடிந்து இருக்கிறது.

இதன் மூலம் மீண்டும் ஆனந்தி கர்ப்பம் என்ற டிராக்கை இயக்குனர் கொண்டு வருவது நன்றாகவே தெரிகிறது.

அன்பு மற்றும் ஆனந்தி ஒன்று சேர வேண்டும் என்பதுதான் நேயர்களின் விருப்பமாக இருக்க மீண்டும் ஆனந்தி கர்ப்பம் என்று காட்டப்படுவது நேயர்களுக்கு அதிருப்தியை கொடுத்திருக்கிறது.

Leave a Comment