புதன்கிழமை, மார்ச் 12, 2025

சிங்கப்பெண்ணில் அரவிந்தின் சதி வலையில் சிக்கிய மகேஷ்.. மொத்த பழியையும் சுமந்து நிற்கும் அன்பு, கதறி அழும் ஆனந்தி

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலில் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. மித்ரா தனக்கு கிடைக்க மாட்டாள் என்ற பயத்தில் வரவேண்டும் மகேஷை தீர்த்து கட்டவே திட்டம் தீட்டி விட்டான்.

இதற்கு பலி ஆகியது அன்பு தான். ஆனந்தியிடம் சம்பள உயர்வு பற்றி பேசுபவருக்கு மகேஷ் அரவிந்தை அவளுக்கு போன் பண்ணி வர சொல்கிறான்.

ஆனால் அரவிந்த் ஏற்கனவே திட்டமிட்டபடி கடற்கரைக்கு அன்புவை வரவேற்கிறான். இருவருக்குள்ளும் பேச்சு வார்த்தையை நடந்து கொண்டிருக்கும்போதே அரவிந்த் மற்றும் அவனுடைய ஆள் மகேஷை தாக்க முயற்சிக்கிறார்கள்.

அரவிந்தின் சதி வலையில் சிக்கிய மகேஷ்

அன்பு அழைத்து வந்த ஆட்கள் தான் தன்னை தாக்குகிறார்கள் என மகேஷ் தவறாக புரிந்து கொள்கிறான். அதே நேரத்தில் அரவிந்த் மகேஷை கத்தியால் இடுப்பில் குத்தி விடுகிறான்.

மேலும் மகேஷை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயற்சிக்கும் போது மயக்கத்தில் இருக்கும் அன்பு எழுந்து அவர்களை அடித்து துரத்துகிறான்.

இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் அன்பு தான் மகேஷ் நிலைமைக்கு காரணம் என மித்ரா மற்றும் பார்வதி கொதித்து எழுகிறார்கள்.

அன்பு எவ்வளவு புரிய வைக்க முயற்சித்தும் பலன் இல்லாமல் போகிறது. உடனே ஆனந்திக்கு கோபம் வந்து அன்புக்காக நீதி கேட்பது போல் ப்ரோமோ முடிந்து இருக்கிறது.

மகேஷ் மயக்கத்தில் இருந்தாலும் ஓரளவுக்கு தன்னை தாக்கியது அரவிந்த் என்பதை உணர்ந்து கொண்டது போல் தான் தெரிகிறது.

இதனால் அன்பு மீது வீண்பழி விழுந்து பிரச்சனை உச்சக்கட்டத்தை நெருங்கும் போது மகேஷ் கண் திறந்து உண்மையை சொல்வான் என்பது நிச்சயம்.

Trending News