வியாழக்கிழமை, மார்ச் 13, 2025

உங்களுக்கு நடிக்க விருப்பம் இருக்கா இல்லையா.? ஷூட்டிங் போகாமல் கல்லா கட்டும் சிம்பு, டென்ஷனில் ஃபேன்ஸ்

Simbu: சிம்பு நடிப்பில் 2023ல் பத்து தல வெளியானது. அதன் பிறகு ரசிகர்கள் அவரை திரையில் பார்த்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது.

கமல் தயாரிப்பில் நடிக்கப் போவதாக அறிவிப்பு வெளிவந்தது. ஆனால் அதன் பிறகு எந்த அப்டேட்டும் இல்லை. அதையடுத்து தக்லைப் படத்தில் இணைந்தார்.

அப்படம் வரும் ஜூன் மாதம் வெளியாக இருக்கிறது. அதை தொடர்ந்து சிம்புவின் பிறந்தநாளில் அடுத்தடுத்து அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் வந்தது.

அதில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் கமல் தயாரிக்க இருந்த படத்தை சிம்புவே தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி அஸ்வத் மாரிமுத்து இயக்கும் காட் ஆப் லவ், எஸ்டிஆர் 49 என படங்கள் வரிசை கட்டுகிறது.

ஷூட்டிங் போகாமல் கல்லா கட்டும் சிம்பு

இதனால் அவருடைய ரசிகர்கள் குஷியாக இருந்தனர். இனிமேல் அடுத்தடுத்து படம் வெளியாக ஆரம்பித்து விடும் என நினைத்தனர்.

ஆனால் தற்போது சிம்புவுக்கு நடிக்க விருப்பம் இருக்கா இல்லையா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஏனென்றால் சில தினங்களுக்கு முன்பு அவர் தன் சோசியல் மீடியா பக்கத்தில் அனுபவி ராஜான்னு அனுப்பி வச்சான் என ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார்.

புது பட அப்டேட் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் இப்போது பார்த்தால் காசா கிராண்ட் ரியல் எஸ்டேட் விளம்பரம் தான் அது. அந்த வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

இதை பார்த்து நொந்து போன ரசிகர்கள் எப்பதான் ஷூட்டிங் போவீங்க. நடிக்கிற ஐடியா இருக்கா என கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.

ஆனால் சிம்பு ஒரு பக்கம் ஜாலியாக விளம்பரங்களில் நடித்து கல்லாகட்டி வருகிறார். ஒருவேளை தயாரிப்பாளர் ஆனதால் இப்படி காசு பார்க்கிறாரோ என்னவோ.

Trending News