Thirumavalavan: ஒரு நடிகரின் பின்னால் போகும் இளைஞர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தேவையில்லை என திருமாவளவன் முழக்கமிட்டு இருக்கிறார்.
விஜய் மற்றும் திருமாவளவன் இடையே நேரடியாக எந்த பிரச்சனையும் இல்லை. திமுக கட்சியை விஜய் எதிர்ப்பதால் திருமா பேசியே ஆக வேண்டும் என அவரை பேசுகிறார் என்ற கருத்தும் உலவிக்கொண்டு தான் இருக்கிறது.
இந்த நிலையில் திமுக செய்யும் ஊழல் பற்றி தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவர் விஜய் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் கடந்த இரண்டு நாட்களாக பெரிய அளவில் பேசி வருகிறார்கள்.
கர்ஜித்த திருமா, என்னவா இருக்கும்?
இந்த நிலையில் தான் திருமாவளவன் இப்படி ஒரு கருத்தை தெரிவித்து இருக்கிறார். தமிழகத்தில் ஒவ்வொரு முறையும் நடிகர் ஒருவர் அரசியலுக்கு வரும்பொழுது விடுதலை சிறுத்தைகள் கட்சி காணாமல் போய்விடும் என்கிறார்கள்.
ஆனால் இன்றுவரை நிலைத்திருப்பது நாம் தான். எனக்கு ஆட்சி, சட்டமன்றம், நாடாளுமன்றம் என்றெல்லாம் எந்த ஆசையும் கிடையாது.
இளைஞர்களிடையே அரசியல் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் தான் நான் இன்று வரை அரசியலில் இருக்கிறேன் என பேசி இருக்கிறார்.
மேலும் சினிமா கவர்ச்சியானால் விடுதலை சிறுத்தைகள் கட்சியை எதுவும் செய்து விட முடியாது. ஆட்டு மந்தையைப் போல் நடிகர்கள் பின்னால் ஓடும் இளைஞர்கள் எனக்கு தேவையே இல்லை என பேசி இருக்கிறார்.
திருமாவளவன் விஜயுடன் சேர்ந்து பயணிக்க வேண்டும் என்பது அவருடைய கட்சியில் இருக்கும் சிலருக்கே விருப்பமாக இருக்கிறது. இந்த நிலையில் இவரை இப்படி பேசி இருப்பது அரசியலில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.