
Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்கப்பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. சீரியல் ரசிகர்கள் இதுநாள் வரைக்கும் என்ன நடக்க கூடாது என்று நினைத்தார்களோ அந்த விஷயம் நடந்து இருக்கிறது.
ஆனந்திக்கு அடிக்கடி தலை சுற்றி மயக்கம் வருவது, மருத்துவமனைக்கு போவது என்பது நடந்து கொண்டு தான் இருந்தது.
தற்போது ஆனந்தி மருத்துவமனைக்கு சென்று எல்லா பரிசோதனைகளையும் மேற்கொள்கிறாள். மேலும் மருத்துவரிடம் தனக்கு அடிக்கடி தலை சுற்றுவது, மயக்கம்,வாந்தி வருவதாகவும் சொல்கிறாள்.
ஆனந்தியின் கர்ப்பத்தை உறுதி செய்த டாக்டர்
எல்லா ரிப்போர்ட்டையும் பார்த்துவிட்டு டாக்டர் ஆனந்தியை தனியாக அழைத்து அவளிடம் பேசுவது போல் காட்டப்படுகிறது.
அதே போல் மருத்துவமனைக்கு அன்பு ஆனந்தியை வந்து பார்ப்பது போலவும் காட்டப்படுகிறது. அன்பு , ஆனந்தி இரண்டு பெரும் சேர்வது தான் ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பு.
மேலும் சிங்கப்பெண் போல் இருக்கும் ஆனந்தி எல்லா தடைகளையும் வென்று சாதிப்பது போல் காட்ட வேண்டும்.
அதை விட்டுவிட்டு அவள் கர்ப்பம் ஆகி, காதலில் தோற்பது போல் காட்டப்பட்டால் சிங்கப்பெண் என்ற பெயருக்கே அர்த்தம் இல்லாமல் போய்விடும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
ஆனந்தியிடம் டாக்டர் என்ன சொல்கிறார், கர்ப்பம் உறுதி செய்யப்படுகிறதா என பொறுத்திருந்து பார்க்கலாம்.