ரோபோ ஷங்கர் பேரனுக்கு பெயர் சூட்டிய கமல்.. காதல் கவிதை மாதிரி வித்தியாசமா இருக்கே.!

Kamal: விஜய் டிவியின் மூலம் பிரபலமான ரோபோ சங்கர் இப்போது பெரிய திரையில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அவரைப் போலவே அவரின் மகள் இந்திரஜாவும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

இவருக்கு கார்த்திக் என்பவர் உடன் கடந்த வருடம் திருமணம் நடந்தது. நிச்சயதார்த்தத்தில் தொடங்கி ரிசப்ஷன் வரை தன் மகள் திருமணத்தை ரோபோ சங்கர் கோலாகலமாக நடத்தினார்.

அது வழக்கம்போல சர்ச்சையாகவும் மாறியது. அதை அடுத்து சில மாதங்களிலேயே இந்திரஜா கருவுற்றார். அவருடைய வளைகாப்பும் ஆடம்பரமாக நடந்தது.

காதல் கவிதை மாதிரி வித்தியாசமா இருக்கே.!

அதை அடுத்து இந்த தம்பதிக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. பேரன் பிறந்த சந்தோஷத்தில் இருந்த ரோபோ சங்கர் தற்போது கமல்ஹாசனை குடும்பத்துடன் சந்தித்துள்ளார்.

அவர்களை வரவேற்று பேசிய கமல் குழந்தைக்கு நட்சத்திரன் என்ற தமிழ் பெயரை சூட்டியுள்ளார். அந்த போட்டோக்கள் தற்போது வெளியாகி உள்ளது.

முன்னதாக கவிஞர் சினேகன் கன்னிகா தம்பதிக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது. அவர்களுக்கும் கமல் தான் பெயர் வைத்தார்.

காதல் கவிதை என அவர் அழகான தமிழ் பெயரை குழந்தைகளுக்கு சூட்டி இருந்தார். வித்தியாசமாக இருந்தாலும் கூட வேறு பெயர் வைத்திருக்கக் கூடாதா என சலசலக்க பட்டது குறிப்பிடத்தக்கது.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →

Leave a Comment