Thug Life First Single: சூர்யா, பூஜா ஹெக்டே ஜோடி சேர்ந்து நடித்துள்ள ரெட்ரோ மே 1ம் தேதி வெளியாகிறது. இப்படத்திலிருந்து வெளியான கனிமா பாடல் தான் இப்போது சோசியல் மீடியா ட்ரெண்டிங்கில் கலக்கிக் கொண்டிருக்கிறது.
அதிலும் பூஜா கல்யாண பொண்ணு கெட்டப்பில் ஆடிய ஆட்டம் தான் இளம் பெண்கள் மத்தியில் வைரலாகியுள்ளது. ஆனால் அதை ஓரம் கட்ட அடுத்த பாடல் வந்துவிட்டது.
மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு நடிப்பில் தக் லைஃப் படம் உருவாகி இருக்கிறது. வரும் ஜூன் 5-ம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் தற்போது வெளியாகி உள்ளது.
தக் லைஃப் ஃபர்ஸ்ட் சிங்கிள்
ஏ ஆர் ரகுமான் இசையில் ஜிங்குச்சா என அப்பாடல் அனைவரையும் ஆட்டம் போட வைத்துள்ளது. அதிலும் கல்யாண விழாவில் இளம் பெண்களும் ஆண்களும் ஆடுவது போல் பாடல் உள்ளது.
இதற்கு முன்பாக மணிரத்தினம் இயக்கிய அலைபாயுதே படத்தில் ஷாலினி யாரோ யாரோடி என கல்யாண வீட்டில் பாடுவார். அப்படித் தான் இப்பாடலும் இருக்கிறது.
அதிலும் சிம்புவின் ஆட்டம் ஒரு பக்கம் இறுதியில் ஆண்டவரின் ஆட்டம் ஒரு பக்கம் என பாடல் முழு வைப் தான். இது தற்போது ட்ரெண்டாகி வரும் நிலையில் இனி கல்யாண வீடுகளில் இப்பாடலை அடிக்கடி கேட்க முடியும்.