தக்லைப் படம் ஜூன் 5ஆம் தேதி ரிலீசாக உள்ளது. மணிரத்தினம் தலைமையில் இந்த படத்திற்கான புரமோஷன் ஜாரூராக நடந்து வருகிறது. கமல், சிம்பு திரிஷா என எல்லோரும் ப்ரோமோஷனில் இறங்கி அடிக்கிறார்கள். இந்த படத்தில் ஜிங்குச்சா என்ற பாடல் ஃபர்ஸ்ட் சிங்கிளாக வெளிவந்தது.
ப்ரோமோஷனில் கமல் மணிரத்னத்தையும், சிம்புவையும் தனியாக கவனித்து வருகிறாராம். போட்டோ சூட்டில் கூட சிம்பு தனியாக இதில் பெயர் வாங்க வேண்டும் என அவரை ஒதுக்கி தனியாக அனுப்பிவிட்டார். அதைப்போல் மணிரத்தினத்தை சாப்பாடு முதல் அனைத்து விதத்திலும் சரியாக கவனித்து வருகிறார் கமல்.
2024 நவம்பர் மாதம் கமலஹாசன் தன்னை உலகநாயகன் என அழைக்க வேண்டாம், வெறும் கமல் என அழைத்தால் போதும் என ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். அதிலிருந்து அவர் KH என்று செல்லமாக அழைக்கப்பட்டு வந்தார். இப்பொழுது தக்லைப் படத்தில் அவருக்கு புதிய ஒரு பட்டம் கிடைத்துள்ளது.
கடந்த ஆறு மாதமாக கமல் அமெரிக்காவில் தான் இருந்தார். சினிமாவில் புதிதாய் வந்த ஏ ஐ என்னும் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் டெக்னாலஜியை பயின்று வந்துள்ளார். இப்பொழுது அவர் வந்ததை ஒட்டி பிரமோசனை ஏற்பாடு செய்து நடத்தி வருகிறார்கள்.
தக்லைப் படத்தில் ஆடியோ வெளியீட்டு விழா மே மாதம் நேரு ஸ்டேடியத்தில் நடக்க உள்ளது. அந்த நேரத்தில் கமலுக்கு புதிதாய் ஒரு பெயர் கொடுக்க திட்டமிட்டுள்ளனர். விண்வெளி நாயகனே என்ற ஒரு பட்டத்தை அவருக்கு கொடுக்க உள்ளனர். இந்த படத்தில் விண்வெளி நாயகனே என்ற ஒரு பாடல் காட்சியும் வருகிறதாம்