Ajith Kumar: அவனவன் எடுக்கிற முடிவு எல்லாம் நமக்கு சாதகமாக அமைகிறது என்று வடிவேலு ஒரு காமெடியில் சொல்லுவார். அது அஜித்துக்கு தான் சரியாக பொருந்தும் போல.
விஜய் அரசியலில் ஏதாவது பண்ணி வைரலாகும் 24 மணி நேரத்திற்குள் அஜித் அதைவிட தரமாக ஏதாவது பண்ணி ரசிகர்களை உச்சி குளிர வைத்து விடுகிறார்.
டெல்லிக்கு பறக்கும் அஜித்
கடந்த இரண்டு நாட்களாக விஜய் கோயம்புத்தூரில் அதிரடி காட்டியது அவருடைய ரசிகர்கள் மற்றும் நண்பர்களுக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுத்தது.
அதே நேரத்தில் அஜித் இன்று பண்ணக்கூடிய சம்பவம் அவருடைய ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமைய இருக்கிறது.
நடிகர் அஜித்குமார் தன்னுடைய பிசியான நேரத்தில் இன்று டெல்லிக்கு செல்ல இருக்கிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு அவருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டிருந்தது எல்லோருக்கும் நினைவிருக்கும்.
இந்த விருதை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கையால் பெறுவதற்கு தான் அதில் இன்று டெல்லிக்கு செல்கிறார்.
இன்று மாலை இந்த விழா கோலாகலமாக நடைபெற இருக்கிறது. அஜித் விருது பெரும் வீடியோ இன்று இணையதளத்தை தெறிக்க விடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.