சிங்கப்பெண்ணில் ஆனந்தி மீது நம்பிக்கை இழக்கும் அன்பு.. அவசர அவசரமாய் நடக்கும் திருமண ஏற்பாடு!

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. ஆனந்தியின் சமீபத்திய நடவடிக்கைகள் அன்புக்கு ஒரு வித சந்தேகத்தை ஏற்படுத்தி இருப்பது எல்லோருக்குமே தெரியும்.

அதை என்னவென்று கண்டுபிடிக்க தான் அன்பு சௌந்தர்யாவை ஆனந்தி தங்கி இருக்கும் ஹாஸ்டலுக்கு அனுப்புகிறான்.

அன்று திட்டமிட்டபடி சௌந்தர்யா போன உடனே ஆனந்திக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை துப்பு துலக்க ஆரம்பிக்கிறாள்.

ஆனந்தி மீது நம்பிக்கை இழக்கும் அன்பு

இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஆனந்தியிடம் இருக்கும் மாத்திரையை எடுத்துக்கொண்டு சௌந்தர்யா மெடிக்கல் ஷாப் போனது போல் காட்டப்படுகிறது.

மேலும் ஆனந்தியிடம் வந்து இந்த மாத்திரை கர்ப்பமாக இருப்பவர்கள் போடும் மாத்திரை என மெடிக்கல் கடையில் செல்கிறார்களே என கேட்கிறாள்.

மேலும் அன்பு ஆனந்திக்கு போன் செய்து இதற்கு முன் செக்கப் செய்த மருத்துவமனைக்கு உடனே இருவரும் போக வேண்டும் என்று சொல்கிறான்.

ஆனந்தி மறுத்து பேசினாலும் அன்பு அதை ஏற்பதா இல்லை. இதிலிருந்து சௌந்தர்யா இந்த விஷயத்தை அன்புடன் சொல்லி இருக்கிறாள் என்பதை தெரிகிறது.

அதே நேரத்தில் ஆனந்தி தன்னுடைய வயிற்றில் வளரும் குழந்தைக்கு யார் அப்பா என்பதை கண்டுபிடிப்பதற்கு முன்பே மகேஷை திருமணம் செய்து கொள்ள மித்ரா திட்டமிட்டு விட்டாள்.

இந்த திட்டத்தை மகேஷின் அம்மா மூலம் நிறைவேற்றுகிறாள். பார்வதி மற்றும் தில்லைநாதன் இருவரும் இணைந்து மகேஷிடம் மித்ராவை திருமணம் செய்து கொள்ள சொல்கிறார்கள்.

இதற்கு மகேஷ் என்ன பதில் அளிக்கிறான், அன்பு ஆனந்தியின் கர்ப்பத்தை கண்டுபிடிக்கிறானா என பொறுத்திருந்து பார்க்கலாம்.