Vijay TV: தொலைக்காட்சி தொடர்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற விதியை மொத்தமாய் புரட்டி போட்டது விஜய் டிவி தான்.
அந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் சன் டிவி சீரியல்களை பார்க்க ஆளில்லாமல் போனது என்று கூட சொல்லலாம். அப்படி சீரியல் ஸ்டீரியோடைப்புகளை மொத்தமாய் மாற்றிய விஜய் டிவியின் ஐந்து சீரியல்களை பற்றி பார்க்கலாம்.
விஜய் டிவியின் 5 சீரியல்கள்
கனா காணும் காலங்கள்: மிருகத்தனமான மாமியார், அப்பாவியான மருமகள் என்ற சீரியல் கான்செப்டை மொத்தமாய் மாற்றி பள்ளியை மையமாக வைத்து எடுக்கப்பட்டது கனா காணும் காலங்கள்.
பள்ளி மாணவர்களிடையே நடக்கும் கருத்து வேறுபாடு, பரீட்சை, ஒரு தலை காதல், காமெடி என அத்தனையையும் ஒரே சீரியலில் கொடுத்து பெரிய அளவில் வரவேற்பு பெற்றது.
ஆபீஸ்: அலுவலகத்தை மையமாகக் கொண்டு வெளியான சீரியல்தான் ஆபீஸ். அலுவலகத்தில் நடக்கும் பிரச்சனைகள், நட்பு, காதல் என அத்தனையையும் நேயர்கள் ரசித்தார்கள். கார்த்திக் – ராஜி ஜோடி 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் ஆனது.
சரவணன் மீனாட்சி: இந்த சீரியலில் சரவணன் மீனாட்சி ஆக நடித்த செந்தில் ஸ்ரீஜா ஜோடி ரீல் ஜோடியாகவும், ரியல் ஜோடியாகவும் அதிக அளவில் கொண்டாடப்பட்டது.
தொலைதூர காதல், காதலில் நடக்கும் சுவாரசியங்கள், காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் குடும்பம் என எதார்த்தமான கதையை கொண்டது இந்த சீரியல்.
காதலிக்க நேரமில்லை: நடிகர் பிரஜின் சன் மியூசிக் தொலைக்காட்சியில் ஃபேமஸ் ஆகி கொண்டிருந்த நேரத்தில் விஜய் டிவியில் அவரை வைத்து எடுக்கப்பட்ட சீரியல் தான் காதலிக்க நேரமில்லை.
இந்த சீரியலின் அறிமுக பாடல் என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு இன்றுவரை எல்லோருடைய பேவரட் ஆகவும் இருக்கிறது.
மதுர: செந்தில் மற்றும் ஸ்ரீஜா முதல் முதலில் இணைந்த சீரியல் தான் மதுர. முழுக்க மதுரை மாவட்டத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட சீரியல் இது.
குடும்பப் பகை, பகை மீறி வளர்ந்த காதல், மதுரை வட்டார நகைச்சுவை என இந்த சீரியல் பெரிய வெற்றியை பெற்றது.