Ajith Kumar: பனை மரத்துக்கு கீழே நின்று பால குடிச்சாலும் கல்லு என்று தான் சொல்வார்கள். அப்படித்தான் சினிமாவை பொறுத்த வரைக்கும் காதலர்களுக்கு உள்ளே பிரச்சனை என்றால் அந்த ஹீரோவை தான் முதலில் குறை சொல்வார்கள்.
அப்படித்தான் நடிகை ஹீராவை அஜித் ஏமாற்றிவிட்டார் என்று பரப்பப்பட்டுக் கொண்டிருக்கும் செய்தியும். அஜித்குமார் மற்றும் ஹீரா காதலித்தது நிதர்சனமான உண்மை என அப்போதைய பத்திரிகையாளர்கள் பலரும் பேட்டி கொடுத்து வருகிறார்கள்.
அதே நேரத்தில் ஹீராவை அஜித் ஏமாற்றவில்லை அஜித்துக்கு துரோகம் செய்தது ஹீரா தான் என்ற புதிய கதையும் வெளியில் வந்திருக்கிறது.
சீனியர் நடிகருடன் நெருக்கம்
அஜித் வளர்ந்து வரும் ஹீரோவாக இருக்கும்போது டாப் லிஸ்டில் இருந்த ஹீரா அஜித்துடன் காதல் வயப்பட்டார்.
இருவருக்குள்ளும் நல்ல நெருக்கம் ஏற்பட்டு மீடியாவுக்கு தெரியும் வரைக்கும் போனது. அதே நேரத்தில் சீரா அப்போதைய சீனியரான பாடி பில்டர் நடிகரின் வலையில் விழுந்திருக்கிறார்.
இதனால்தான் அஜித் ஹீராவை விட்டு பிரிந்து விட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் அந்த சீனியர் நடிகர் ஹீராவை பத்திரிக்கையாளர்களிடம் பேச விட்டதே கிடையாதாம்.
ஒரு பெரிய பங்களாவில் குடி வைத்திருந்ததாகவும் சொல்லப்படுகிறது. அதன் பின்னர் ஹீரா கடைசியாக நடித்த படம் சுயம்வரம் பிறகு திருமணம் ஆகிய செட்டிலான அவர் ஒரு சில வருடங்களிலேயே அந்த திருமண உறவையும் முறித்துக் கொண்டார்.
தற்போது எதற்காக அஜித் மீது இது போன்ற வீண் பழி சுமத்தப்படுகிறது என்பதுதான் எல்லோருடைய கேள்வியாகவும் இருக்கிறது.