நறுக்குன்னு உண்மையை உடைத்த கமலஹாசன்.. சிம்புக்கு ஓவரா முட்டுக் கொடுக்கும் ஆண்டவர்

தக்லைப் ஃபீவர் இப்போதிலிருந்தே ஆரம்பித்துவிட்டது. ஜூன் ஐந்தாம் தேதி ரிலீஸ் ஆகப்போகும் இந்த படத்திற்கு ஜருராக பிரமோஷன் வேலைகளை பார்த்து வருகிறார்கள். கமல், மணிரத்தினம், சிம்பு என மூவரும் இறங்கி அடிக்கிறார்கள்.

பிரியாணி விருந்து, பத்திரிகையாளர்கள் சந்திப்பு, நேர்முக கானல் என ஒன்றையும் விடுவதில்லை இந்த கூட்டம். சுமார் 36 வருடங்களுக்கு பிறகு கமல் மற்றும் மணிரத்தினம் இணைந்து இதில் வேலை செய்துள்ளனர். படத்திற்கு இன்னொரு பிளஸ் பாயிண்டாக சிம்பு இருக்கிறார்.

தக்லைப் எந்த மாதிரியான கதை என்பது இன்னும் புரியாமல் இந்த படத்திற்குண்டான எதிர்பார்ப்பு எகிரி வருகிறது. ஒரு பக்கம் கமல் வில்லன் என்கிறார்கள், மறுபக்கம் சிம்பு தான் வில்லன் என்கிறார்கள். இந்த சஸ்பென்சை மணிரத்தினம் மிகவும் சீக்ரெட்டா வைத்திருக்கிறார்.

இதனிடையே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ஜிங்குச்ஜா பாடல் வெளியாகி மேற்கொண்டு குழப்பி வருகிறது. கமலும், சிம்புவும் சேர்ந்து நடனமாடி வில்லன் யார் என்று தெரியாமல் செய்துள்ளனர். ரங்கராய சக்திவேல் நாயக்கராக வரும் கமல் தான் நெகட்டிவ் கேரக்டர் என்கிறார்கள்.

மாறாக ராஜஸ்தான் கொள்ளைக்காரராக கமல் நடித்துள்ளார் அவரை அடக்கும் கதாபாத்திரத்தில் கலெக்டராக சிம்பு வருகிறார் என்றெல்லாம் கதைகள் உலாவி கொண்டிருக்கிறது. மறுபக்கம் சிம்புவிற்கு ஓவர் முட்டு கொடுத்து வருகிறார் ஆண்டவர். ஆரம்பத்தில் தக்லைப் என் படமாக இருந்தது, அதன்பின் சிம்பு படமாக மாறிவிட்டது என மேடைக்கு மேடை கூறி வருகிறார் கமலஹாசன்.