Sun Tv Trp Rating List: சமீப காலமாக சன் டிவி சீரியல்கள் கொஞ்சம் கொஞ்சமாக அடி வாங்கிக் கொண்டே வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் வெளிவந்த டிஆர்பி ரேட்டிங்கில் எதிர்பார்க்காத அளவிற்கு கம்மியான புள்ளிகளை சன் டிவி சீரியல் பெற்றிருக்கிறது.
12 புள்ளிகளில் இருந்து 11, 10, 9 வந்து கொண்டு இருந்த சன் டிவி சீரியல்கள் இந்த வாரம் 8 புள்ளிக்கு கம்மியாகிவிட்டது. முக்கியமாக சன் டிவி சீரியலை கொஞ்சம் கொஞ்சமாக விஜய் டிவி ஓவர் டேக் பண்ணி வருகிறது. இதன்படி எந்த சீரியல்கள் எவ்வளவு புள்ளிகளை பெற்றிருக்கிறது என்பதை பார்க்கலாம்.
இந்த வாரம் ஐந்தாவது இடத்தில் 7.32 புள்ளிகளைப் மருமகள் சீரியல் பெற்றிருக்கிறது. ஆதிரை மற்றும் பிரபுவுக்கு புதுசு புதுசாக தொடர்ந்து பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது. இவர்களுடைய பிரச்சினையும் சரியாவதாக இல்லை, குடும்பத்தில் இருப்பவர்களும் திருந்துவதாக இல்லை. அதனால் அரைச்ச மாவை அரைத்துக் கொண்டு வருகிறார்கள்.
அடுத்ததாக விஜய் டிவியில் இந்த ஒரு சீரியல்தான் அதிக புள்ளிகளை பெறும் என்பது போல் இந்த வாரமும் 7.64 புள்ளிகளை நான்காவது இடத்தில் சிறகடிக்கும் ஆசை சீரியல் இருக்கிறது. ரோகிணி பற்றிய விஷயங்கள் கொஞ்சம் தான் வெளியே வந்திருக்கிறது, அதற்கே விஜயா, ரோகினியை மனோஜிடம் இருந்து பிரிக்க வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் ரோகினிக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி ஒரு குழந்தை இருக்கு என்று தெரிந்தால் ரோகிணி வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும்.
இதனை தொடர்ந்து கயல் சீரியல் 8.22 புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறது. வழக்கமாக கயலுக்கு வெளியே இருந்து தான் பிரச்சனை வரும். ஆனால் அது ரொம்பவே போர் அடித்து விட்டது என்பதற்காக புதுசாக கயலின் அண்ணி மூலம் கயலுக்கு செக் வைக்கப்பட்டிருக்கிறது. இதில் எழிலின் கனவா? அல்லது அண்ணியின் ஆசையா என்ற குழப்பத்தில் கயல் இருக்கிறார்.
அடுத்ததாக 8.48 புள்ளிகளை பெற்று மூன்று முடிச்சு சீரியல் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. நந்தினி, சூர்யா குடும்பத்தில் இருப்பவர்களிடம் அவமானப்பட்டதால் 2 லட்சம் ரூபாய் பணத்தை ரெடி பண்ணி தான் நான் வீட்டிற்குள் வருவேன் என்று சவால் விட்டிருந்தார். அதன்படி வட்டிக்கு பணம் வாங்கி சுந்தரவல்லி வீட்டுக்கு நந்தினி கெத்தாக வருகிறார்.
இதனை தொடர்ந்து 8.92 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் சிங்க பெண்ணே சீரியல் இருக்கிறது. ஆனந்தி கர்ப்பம் என்ற விஷயம் அன்புவைத் தவிர மற்ற எல்லாருக்கும் தெரிய வருகிறது. ஆனாலும் தன்னுடைய கர்ப்பத்திற்கு யார் காரணம் என்பது ஆனந்திக்கு தெரியாததால் அதை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஆனந்தி போராடி வருகிறார். ஆனால் இந்த ஒரு டிராக் வைத்து கடந்த சில வாரங்களாக இழுத்தடித்துக் கொண்டு வருகிறார்கள்.
அதனால் தான் மொத்தமாக சன் டிவி சீரியல்கள் டிஆர்பி ரேட்டிங்கில் புள்ளிகளை கம்மியாக பெற்றிருக்கிறது. இதை ஓவர் டேக் பண்ணும் விதமாக விஜய் டிவி அதிக புள்ளிகளை எடுத்துக்கொண்டு வருகிறது.