நல்ல நேரம் வந்தும் கூட சிம்புவை துரத்தும் சனி.. STRக்கு பகவான் கிருபையில் கிடைத்த புது அதிர்ஷ்டம்

எஸ்டிஆர் 51 வரை சிம்பு அடுத்தடுத்த தனது மூன்று லைன் அப் படங்களை அறிவித்துவிட்டார். இருந்தாலும் கூட இப்பொழுது அதற்கு சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. தக்லைப் படத்தை பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சிம்பு. அடுத்தடுத்து மூன்று பிரமாதமான இயக்குனர்களுடன் கூட்டணி போட உள்ளார்.

சிம்புவின் 50 ஆவது படத்தை தேசிங்கு பெரியசாமியும், 51 வது படத்தை அஸ்வந்த் மாரிமுத்துவும் இயக்க உள்ளனர். இதில் எஸ்டிஆர் 49 மற்றும் இழுவையில் இருக்கிறது. இந்த படத்தை தயாரிப்பதாக இருந்த டான் பிக்சர்ஸ் நிறுவனம் இப்பொழுது சிக்கலில் உள்ளது.

கடந்த ஓராண்டாக சினிமாவில் கொடி கட்டி பறந்து வரும் டான் பிக்சர்ஸ் நிறுவனர் ஆகாஷ் பாஸ்கரனின் பெயர் தற்போது டேமேஜ் ஆகி உள்ளது. ED வட்டத்துக்குள் இருக்கும் அவர் தொடர்ந்து படங்கள் தயாரிக்க முடியாத சிக்கலில் இருப்பதால் சிம்புவிற்கு பிரச்சனை வந்துள்ளது. இதனால் 49வது படத்திற்கு தயாரிப்பாளர் பார்த்துக் கொண்டிருக்கிறார் சிம்பு.

கமலுடன் மணிரத்தினம் படத்தில் நடித்து முடித்திருக்கும் சிம்பு வேற லெவலில் மார்க்கெட்டில் இருக்கிறார். ஜூன் 5ஆம் தேதி தக்லைப் படம் ரிலீஸ் ஆக உள்ளது. ஏற்கனவே கமல் தக்லைப் பட புரமோஷன் நிகழ்ச்சிகளில், இது சிம்பு படம் அவர்தான் இந்த படத்தை தூக்கி நிறுத்தி உள்ளார் என கூறி வருகிறார்.

இதனால் தக்லைப் படத்திற்கு பின் சிம்புவின் மார்க்கெட் இன்னும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்பொழுது சிம்புக்கு கிடைத்த புது அதிர்ஷ்டமாக இயக்குனர் மோகன் ராஜா ஒரு கதை கூறி இருக்கிறார். சுமார் 8 வருடங்களுக்கு பிறகு தமிழில் படத்தை இயக்கும் அவர் நிச்சயமாக செம கதையை கூறியிருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக மோகன் ராஜா இயக்கிய படம் வேலைக்காரன் அதுவும் 2017 ஆம் ஆண்டு வந்தது.