வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

நீங்க ஆம்பளையா, உங்களுக்கு எதுக்கு மீசை?. டாப் நடிகர்களை காரி துப்பும் ப்ளூ சட்டை

Blue Sattai Maran Controversy: தமிழ் சினிமாவில் முரட்டுவில்லனாக இருக்கக்கூடிய மன்சூர் அலிகானுக்கு வாய் கொஞ்சம் அதிகம் தான். இவர் பெரும்பாலும் யாருக்குமே மரியாதை கொடுக்காமல் தெனாவட்டாக பேசக்கூடியவர். லியோ படத்தில் நடித்திருந்த மன்சூர் அலிகான் திரிஷாவுடன் பெட்ரூம் சீன் இருக்கும் என எதிர்பார்த்ததாக கொச்சையாக பேசினார். 

இதற்கு திரிஷாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் மன்சூர் அலிகானுக்கு பதிலடி கொடுத்தார். திரிஷா- மன்சூர் அலிகான் பிரச்சனையை இயக்குனர்களான லோகேஷ் கனகராஜ் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இருவரும் தான் பேசினார்கள். இவர்களைத் தவிர வேற எந்த சீனியர் நடிகர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

இவர்களுடன் மாளவிகா மோகனன், குஷ்பூ போன்ற ஒரு சில நடிகைகளும் மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த விஷயத்திற்கு விஜய், அஜித், ரஜினி, கமல் எல்லோரும் சுத்தமா வாயைத் திறக்கல. அதனால் ப்ளூ சட்டை மாறன் வழக்கம் போல் சோசியல் மீடியாவில் தன்னுடைய ட்விட்டர் பதிவில், அவங்க எல்லாம் வாயில கொழுக்கட்டையை வச்சிருக்காங்களான்று காட்டமாக பதிவிட்டு இருக்கிறார்.

Also Read: கொம்பு சீவி விட்ருக்காங்க, உங்க பருப்பு எண்ட வேகாது.. த்ரிஷா குறித்த சர்ச்சைக்கு மன்சூர் பதில்

ட்விட்டர் பதிவில் வெளுத்து வாங்கிய ப்ளூ சட்டை மாறன் 

இந்த ட்விட்டர் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களாக பார்க்கப்படும் ரஜினி, கமல், விஜய், அஜித் போன்றோர் மட்டுமல்லாமல் சீனியர் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் தங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்காமல் அமைதியாக இருக்கிறீர்கள்.

இவர்களுடன் திரிஷா நிறைய படங்களில் நடித்திருக்கிறார். பெண்களுக்காக புரட்சி வசனம் எல்லாம் ஹீரோக்கள் சினிமாவில் தான் பேசுவார்கள் போல, நிஜ வாழ்க்கையில் செய்ய மாட்டார்கள். திரிஷாவை பற்றி தெரிஞ்ச வரைக்கும், அவருக்கு எதிராக கிளம்பிய சர்ச்சைக்கு வாய் திறக்காமல் இருக்கிறார்கள். உங்களுக்கெல்லாம் எதுக்கு மீசை? என்று ப்ளூ சட்டை மாறன் கிளறி விட்டிருக்கிறார்.

ப்ளூ சட்டை மாறன் ட்விட்டர் பதிவு

blue-sattai-maran-twit-cinemapettai
blue-sattai-maran-twit-cinemapettai

Also Read: மன்சூர் அலிகான் செய்த காரியத்தால் லோகேஷ் எடுத்த அதிரடி முடிவு.. லியோவில் நடிக்க வைத்து தான் பெரிய தவறு

Trending News