Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

இந்தியாவிற்கு பெருமை தேடித் தந்த AK.. பெல்ஜியம் கார் ரேஸில் சாதனை பெற்ற அஜித் டீம்

இந்தியாவிற்கு பெருமை தேடித் தந்த AK.. பெல்ஜியம் கார் ரேஸில் சாதனை பெற்ற அஜித் டீம்

Ajith: அஜித் நடிப்பை தாண்டி பல திறமைகள் கொண்டவர். ஆரம்பத்தில் இருந்தே ரேஸில் இவருக்கு அதிக ஈடுபாடு உண்டு. நேரம் கிடைக்கும் போதெல்லாம் பைக் ரைடு செல்வது இவரின் வழக்கம். துணிவு, விடாமுயற்சி படபிடிப்பின் போது கூட இவர் […]

Ajith: அஜித் நடிப்பை தாண்டி பல திறமைகள் கொண்டவர். ஆரம்பத்தில் இருந்தே ரேஸில் இவருக்கு அதிக ஈடுபாடு உண்டு.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் பைக் ரைடு செல்வது இவரின் வழக்கம். துணிவு, விடாமுயற்சி படபிடிப்பின் போது கூட இவர் பைக்கிலேயே பல நாடுகளுக்கு சுற்று பயணம் செய்தார்.

அதை அடுத்து கார் ரேஸில் மீண்டும் ஆர்வம் காட்ட தொடங்கினார். கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற 24 மணி நேர போட்டியில் இவருடைய அணி மூன்றாவது இடத்தை பிடித்தது.

இந்தியாவிற்கு பெருமை தேடித் தந்த AK

அதைத்தொடர்ந்து இத்தாலியில் நடைபெற்ற ரேசில் மூன்றாம் இடம் கிடைத்தது. அதை அடுத்து தற்போது பெல்ஜியமில் நடைபெற்ற ரேசில் இரண்டாம் இடத்தை தட்டிச் சென்றுள்ளது அஜித் டீம்.

அவருக்கு ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வீடியோக்களும் போட்டோக்களும் தற்போது சோசியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறது.

இது ஒரு புறம் இருக்க ரேஸில் இப்போது அவர் தீவிரமாக இருந்தாலும் அக்டோபருக்கு பிறகு நடிப்பதற்கு என சில மாதங்களை ஒதுக்க திட்டமிட்டுள்ளார்.

மேலும் தற்போது அவரின் குட் பேட் அக்லி தமிழ்நாட்டில் மட்டுமே 133 கோடிகளை வசூலித்து சாதனை படைத்துள்ளது. அதை தொடர்ந்து அவருடைய அடுத்த பட அறிவிப்புக்காகவும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.