புதன்கிழமை, நவம்பர் 20, 2024

சிம்புவால் வாழ்க்கையை தொலைத்த நெல்சன்.. கைப்பிடித்து தூக்கிவிட்ட அனிருத்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா, டாக்டர் படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதை தொடர்ந்து தளபதி விஜய்யை இயக்கும் வாய்ப்பு நெல்சனுக்கு கிடைத்தது. தற்போது நெல்சன், விஜய் கூட்டணியில் உருவான பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் வேட்டையாடி வருகிறது.

இதைத்தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படத்தை இயக்கும் வாய்ப்பு நெல்சனுக்கு கிடைத்துள்ளது. ஆனால் நெல்சன் ஆரம்பத்தில் விஜய் டிவியில் அசிஸ்டன்ட் டைரக்டராக வேலை பார்த்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பெரும்பாலான சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களுக்கு நெல்சன் அசிஸ்டன்ட் டைரக்டராக பணியாற்றினார்.

மேலும் வெள்ளித்திரையில் எப்படியாவது படத்தை இயக்கவேண்டும் என்று பல நாள் கனவில் இருந்த நெல்சன் அதற்கான கதையையும் எழுதி வைத்திருந்தார். தன்னுடைய முதல் படத்தை சிம்புவை வைத்து இயக்கும் வாய்ப்பு நெல்சனுக்கு கிடைத்தது. வேட்டை மன்னன் என்று பெயரிடப்பட்ட அந்த படத்தில் சிம்பு, ஹன்சிகா, ஜெய், சந்தானம் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

ஆனால் ஒரு சில காரணங்களால் இப்படம் பாதியிலேயே நின்று போனது. முதல் படமே பாதியிலேயே நின்று போனதால் மிகப்பெரிய அப்செட்டில் இருந்த நெல்சன் மீண்டும் விஜய் டிவிக்கு சென்றார். அப்போது இசையமைப்பாளர் அனிருத் ஆபிஸில்தான் நெல்சன் தங்கியிருந்தார். நெல்சனை ஊக்குவித்து லைகா நிறுவனத்திடம் அறிமுகம் செய்து கோலமாவு கோகிலா படத்தை எடுக்க செய்தார்.

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவையும், அப்போது காமெடியில் கலக்கி வந்த யோகிபாபுவையும் வைத்து ஒரு அருமையான திரைக்கதை அமைத்திருந்தார் நெல்சன். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். கோலமாவு கோகிலா படம் மற்றும் பாடல்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இப்படம் நெல்சனுக்கு ஒரு நல்ல பெயரை வாங்கிக்கொடுத்து அவரை வளர்த்து விட்டது. இவை அனைத்திற்கும் காரணமாய் இருந்தது அனிருத் தான். அவருடைய உத்வேகத்தால் தான் நெல்சன் மீண்டும் வெள்ளித்திரைக்கு வந்தார். மேலும் நெல்சன் இயக்கத்தில் வெளியாகும் அனைத்து படங்களுக்குமே அனிருத் தான் இசையமைத்து வருகிறார்.

- Advertisement -spot_img

Trending News