Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

பீஸ்ட் படத்தால் சிவகார்த்திகேயனுக்கு வந்த தலைவலி.. ஆறப்போட்டு அடிக்க பலே திட்டம் போடும் படக்குழு

பீஸ்ட் படத்தால் சிவகார்த்திகேயனுக்கு வந்த தலைவலி.. ஆறப்போட்டு அடிக்க பலே திட்டம் போடும் படக்குழு

டாக்டர் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் டான் மற்றும் அயலான் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் டான் படத்தை சிபிச்சக்கரவர்த்தி இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரியங்கா அருண் மோகன், எஸ் ஜே சூர்யா, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்துள்ளனர். […]

டாக்டர் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் டான் மற்றும் அயலான் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் டான் படத்தை சிபிச்சக்கரவர்த்தி இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரியங்கா அருண் மோகன், எஸ் ஜே சூர்யா, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் ரிலீசுக்கு தயாராக உள்ளது. டான் படத்தை மார்ச் மாதமே வெளியிட திட்டமிட்டிருந்த படக்குழு ஆர்ஆர்ஆர் படத்தின் வெளியிட்டால் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தது. தற்போது படக்குழு மே 13ஆம் தேதி டான் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது.

தற்போது ஊடகங்கள், தொலைக்காட்சி, சமூக வலைதளங்கள் என அனைத்திலும் பீஸ்ட் மற்றும் கே ஜி எஃப் படத்தைப் பற்றிய செய்திகள்தான். இந்தச் செய்திகள் தான் ரசிகர்களின் கவனத்தைப் பெற்று வருகிறது. மேலும், இந்த இரண்டு படங்களுக்கு இடையே கருத்து மோதல் இணையத்தில் நடைபெற்று வருகிறது.

தற்போது எந்த படம் அல்லது எந்த செய்திகள் வந்தாலும் தற்போது எடுபடாது. இந்நிலையில் தற்போது டான் படத்தின் புரமோஷனுக்காக ஏதேனும் வேலைகள் செய்தால் அது அவ்வளவாக வரவேற்பு கிடைத்தது. இதனால் படத்திற்காக எந்த வேலையும் செய்யாமல் படக்குழு அமைதியாக உள்ளது.

மேலும் பீஸ்ட் பற்றிய செய்திகள் எல்லாம் இணையத்தில் கொஞ்சம் குறையத் தொடங்கிய பின்பு டான் படத்திற்கான ப்ரோமோஷன் வேலையை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. ஏனென்றால் கேஜிஎப் படத்தை போன்ற பெரிய படத்துடன் மோதி பீஸ்ட் படம் தோல்வியை சந்தித்தது.

இதனால் இந்த செய்திகள் எல்லாம் முடிந்த பின்பு இப்படி ஆறப்போட்டு அடித்தால் தான் மக்களிடம் எளிதாக செல்லும் என்ற திட்டத்தை கையில் எடுத்திருக்கிறது டான் படக்குழு. இது எந்த அளவுக்கு வேலை செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.