Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

பெரிய பிரச்சனையை மறைத்த விஜய் டிவி.. அப்ப கமல் சொன்னதெல்லாம் புருடாவா

பெரிய பிரச்சனையை மறைத்த விஜய் டிவி.. அப்ப கமல் சொன்னதெல்லாம் புருடாவா

விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி பெரிய அளவில் வெற்றி பெற்றதையடுத்து தற்போது ஹாட்ஸ்டாரில் பிக்பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியையும் கமல்ஹாசன்தான் தொகுத்து வழங்கினார். ஆனால் சில நாட்களுக்கு முன் […]

விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி பெரிய அளவில் வெற்றி பெற்றதையடுத்து தற்போது ஹாட்ஸ்டாரில் பிக்பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியையும் கமல்ஹாசன்தான் தொகுத்து வழங்கினார்.

ஆனால் சில நாட்களுக்கு முன் எதிர்பாராத விதமாக கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். தற்போது கமல்ஹாசனுக்கு பதில் அந்த நிகழ்ச்சியை நடிகர் சிம்பு தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில் கமல்ஹாசன் அந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதற்கு விக்ரம் படத்தின் ஷூட்டிங் தான் காரணம் என்று தெரிவித்திருந்தார். ஆனால் உண்மையில் விக்ரம் படத்தின் இறுதி நாள் ஷூட்டிங் இன்று முடிவடைந்திருக்கிறது.

அதில் நடிகர் பகத் பாசில் பங்கேற்கும் காட்சிகள் பம்மலில் படமாக்கப்பட்டது. இதற்கு முன்பே கமல்ஹாசனின் காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டது. அதாவது அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவதற்கு முன்பு அவருடைய காட்சிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளது.

அப்புறம் ஏன் அவர் இப்படி ஒரு காரணத்தைச் சொல்லி பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார் என்ற சந்தேகம் தற்போது அனைவருக்கும் எழுந்துள்ளது. மேலும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பை ஐம்பத்தி ஐந்து நாட்களுக்குள் முடிப்பதற்கு இயக்குனர் லோகேஷ் திட்டமிட்டிருந்தார்.

ஆனால் கமலின் அரசியல் மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் காரணமாக படப்பிடிப்பு 110 நாட்கள் வரை இழுத்து விட்டது. இருப்பினும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தற்போது வெற்றிகரமாக முடிவடைந்திருக்கிறது. ஆனாலும் கமல் விஜய் டிவியை விட்டு வெளியேறியதற்கு பின் ஏதோ மிகப் பெரிய காரணம் இருக்க வேண்டும். அந்தக் காரணம் என்ன என்பதை விஜய் டிவி கமுக்கமாக மறைத்து விட்டதாகவே தெரிகிறது

V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.