Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

வெளிவந்த கமலின் அமெரிக்கா ட்ரிப் ரகசியம்.. அடடா! வரவை எதிர்பார்த்து கொண்டாடும் ரசிகர்கள்

வெளிவந்த கமலின் அமெரிக்கா ட்ரிப் ரகசியம்.. அடடா! வரவை எதிர்பார்த்து கொண்டாடும் ரசிகர்கள்

உலகநாயகன் கமலஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்துள்ளார். மிக நீண்ட நாட்களாக படப்பிடிப்பு நடந்த நிலையில் தற்போது விக்ரம் படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது. மேலும், மிக விரைவில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் […]

உலகநாயகன் கமலஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்துள்ளார். மிக நீண்ட நாட்களாக படப்பிடிப்பு நடந்த நிலையில் தற்போது விக்ரம் படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது. மேலும், மிக விரைவில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு முடிந்த கையோடு கமல் அமெரிக்கா சென்றுள்ளார். எப்போதுமே கமல் அமெரிக்கா சென்று திரும்புகையில் ஏதாவது ஒரு புதுவிதமான டெக்னாலஜியை அடுத்த படத்தில் பயன்படுத்துவதற்காக கற்றுக்கொண்டு தான் வருவார் என பல ரசிகர்கள் கூறுவார்கள்.

இந்நிலையில் அடுத்த படத்திற்காக தான் தற்போது கமல் அமெரிக்கா சென்றுள்ளார் என்பது தற்போது தெரியவந்துள்ளது. பா ரஞ்சித் உடன் அடுத்த படத்தில் கமல் இணைய உள்ளார். ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு கபாலி, காலா என சூப்பர் ஹிட் படங்களை பா ரஞ்சித் கொடுத்துள்ளார்.

மேலும், கடந்த ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. இந்நிலையில் கமலின் கைவசம் இந்தியன்-2, விருமாண்டி 2 போன்ற படங்கள் உள்ளது. இந்நிலையில் கமலஹாசனிடம் பா ரஞ்சித் ஒரு வரியில் கதை கூறியுள்ளார்.

அந்தக்கதை கமலுக்கு பிடித்துப்போக ஓகே சொல்லிவிட்டார். மேலும் ஸ்கிரிப்டையும் தயாரிக்கச் சொல்லி உள்ளார். இந்நிலையில் அந்த படத்தில் நடிப்பதற்காக கமல் பல உருவம் மாற்றங்களை செய்ய அமெரிக்கா சென்றுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

உலகநாயகன் கமலஹாசன் மனதளவில் என்றுமே இளமையாக இருக்க கூடியவர். ஆனால் வயது முதிர்வு காரணமாக உற்றுப் பார்க்கையில் அவரின் முகங்களில் சிறு சுருக்கங்கள் தெரிகிறது. அந்த சுருக்கங்களை அகற்றவே கமல் அமெரிக்கா சென்றுள்ளார் என்ற உண்மை இப்பொழுது வெளிவந்துள்ளது.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.