Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

1000 கோடி தூக்கி கொடுத்தம் மறுத்த ஹீரோ.. என்னப்பா இது பிக் பாஸ்க்கு வந்த சோதனை!

1000 கோடி தூக்கி கொடுத்தம் மறுத்த ஹீரோ.. என்னப்பா இது பிக் பாஸ்க்கு வந்த சோதனை!

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் பேர் ஆதரவு இருக்கிறது. இதன் மூலம் பல சீசன்களை கடந்து வெற்றிகரமாக ஓடிவரும் இந்நிகழ்ச்சி கோடிகளை குவித்து வருகிறது. இந்நிலையில் பிக் பாஸ் ஆயிரம் கோடி கொடுத்தும் அதனை உதாசீனப்படுத்தி உள்ளார் […]

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் பேர் ஆதரவு இருக்கிறது. இதன் மூலம் பல சீசன்களை கடந்து வெற்றிகரமாக ஓடிவரும் இந்நிகழ்ச்சி கோடிகளை குவித்து வருகிறது. இந்நிலையில் பிக் பாஸ் ஆயிரம் கோடி கொடுத்தும் அதனை உதாசீனப்படுத்தி உள்ளார் பிரபல நடிகர்.

பாலிவுட்டில் பிரபல நடிகரான சல்மான் கான் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த 15 சீசன்களில் சல்மான் கான் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இதனால் ஒவ்வொரு சீசனிலும் அதிகப்படியான வரவேற்பு தொடர்ந்து கிடைத்து வருகிறது.

ஆனால் சில வருடங்கள் முன்பே இந்நிகழ்ச்சியில் இருந்து விலகப் போவதாக சல்மான் கான் கூறியிருந்தார். ஆனால் பிக் பாஸ் விடாப்படியாக சல்மான்கான்னை விடாமல் 15 சீசன்களாக தொகுத்து வழங்க வைத்துள்ளது. இதுவரை 350 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால் இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வேண்டும் என்றால் ஆயிரம் கோடி வேண்டும் என கேட்டுள்ளார். ஏனென்றால் இவ்வளவு பணம் கொடுக்க முடியாது என்பதால் பிக் பாஸ் வேறு ஒரு நபரை தேர்ந்தெடுக்கும் என்பதற்காக சல்மான் கான் இவ்வாறு கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது.

சல்மான் கான் ஆயிரம் கோடி கேட்ட போது பிக் பாஸ் அதிர்ச்சி அடைந்தாலும், தற்போது அவர் கேட்ட சம்பளத்தை கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் அதற்கும் சல்மான் கான் எதுவும் சொல்லாமல் மௌனம் சாதித்த வருகிறாராம்.

ஒருவேளை ஆயிரம் கோடி கொடுத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சல்மான் கான் ஒப்புக்கொள்ளவில்லை என்றால் ரோகித் செட்டியை அணுகலாம் என பிக் பாஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.