Sivakarthikeyan: இந்த வருடத்தின் ஆறு மாதங்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்து ஓடிவிட்டது. பெரிய அளவில் படங்கள் ரிலீஸ் ஆகி இருந்தாலும் அதில் ஒன்று இரண்டு தான் ரசிகர்கள் கொண்டாடும் அளவுக்கு அமைந்தது.
அடுத்த ஆறு மாதத்தில் ஆவது தமிழ் சினிமாவை தலை நிமிர்ந்தும் அளவுக்கு படங்கள் ரிலீஸ் ஆகுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி பெரிய அளவில் எதிர்பார்க்கப்படும் ஐந்து படங்களை பற்றி பார்க்கலாம்.
ரிலீசுக்கு காத்திருக்கும் 5 படங்கள்
கூலி: கூலி படம் வரும் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆக அதிக வாய்ப்பு இருக்கிறது. டாப் ஹீரோக்களை வைத்து தரமான படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் ரஜினியுடன் இணைந்து இருப்பது இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்க காரணம்.
ரஜினிகாந்த், நாகார்ஜுனா, அமீர்கான், சத்யராஜ், சுருதிஹாசன் பூஜா ஹெக்டே என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் இணைந்திருக்கிறது.
மதராஸி: தமிழ் சினிமாவின் நம்பிக்கை நாயகனாக வளர்ந்து வந்து கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். மதராசி என்ற டைட்டிலே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.
கஜினி, துப்பாக்கி போன்ற படங்களின் வரிசையில் சிவகார்த்திகேயனுக்கு இந்த படம் நல்ல வெற்றியை தேடி தரும் என அவருடைய ரசிகர்களால் அதிகம் நம்பப்படுகிறது.
குபேரா: தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனாவுடன் தனுஷ் இணைந்து நடித்திருக்கும் குபேரா படம் செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது.
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. ஏற்கனவே படத்தின் டிரைலர் நல்ல வரவேற்பு பெற்றிருப்பதால் இந்த படம் இந்த வருடத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் லிஸ்டில் சேர்ந்து இருக்கிறது.
தலைவன் தலைவி: விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் இணைந்திருப்பதாலேயே தலைவன் தலைவி படத்திற்கு பெருமளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது.
எதார்த்தமாக நடிக்க கூடிய இவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு படம் பண்ணினால் அது தரமானதாக இருக்கும் என்ற ரசிகர்களின் நம்பிக்கை தான் அதற்கு காரணம்.
மாரீசன்: மாமன்னன் திரைப்படத்திற்கு பிறகு வடிவேலு மற்றும் பகத் பாஸில் மாரீசன் படம் மூலம் இணைந்திருக்கிறார்கள். இந்த படம் மெய்யழகன் அளவுக்கு எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சமீபத்தில் வெளியான ட்ரெய்லர் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் அடுத்த மாதம் ரிலீஸ் ஆகும்.