சினிமா செய்திகள்

அபூர்வ சகோதரர்கள், பாலா பட நடிகர் அகால மரணம்.. யாரும் உதவாததால் ரோட்டில் இறந்து கிடந்த பரிதாபம்

அபூர்வ சகோதரர்கள் படத்தில் நடித்த பிரபலம் அனாதையாக இறந்து கிடந்துள்ளார்.

By Arun · 02 ஆக 2023 · Updated 11 மே 2025
bala-kamal

Apoorva Sagodharargal: சமீப காலமாக சினிமா பிரபலங்களின் இறப்புச் செய்தி ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது. அதுவும் சினிமாக்காரர்கள் என்றாலே வசதி வாய்ப்புடன் வாழக்கூடியவர்கள் என்று முத்திரை குத்தப்பட்டிருக்கிறது. ஆனால் பலர் அடுத்த வேலை சாப்பாட்டிற்கு கூட வழியில்லாமல் இறந்த விஷயம் அடுத்தடுத்து வெளியாகி இருக்கிறது.

அந்த வகையில் கமலுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய அபூர்வ சகோதரர்கள் படத்தில் நடித்த பிரபலம் ஒருவர் திடீரென இறந்த செய்தி சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது சினிமா வாய்ப்பு கிடைக்காததால் பிச்சை எடுத்து பிழைத்துக் கொண்டிருந்த அவர் ரோட்டில் இறந்து கிடந்துள்ளார்.

அதாவது அபூர்வ சகோதரர்கள் படத்தில் அப்பு என்ற கதாபாத்திரத்தில் குள்ளமாக கமல் நடித்திருப்பார். அதில் அவருடன் இணைந்து நான்கு பேர் நடித்திருந்த நிலையில் அதில் ஒருவர் தான் மோகன். இவர் அதிசய மனிதன், நான் கடவுள் போன்ற சில படங்களில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் வறுமையில் வாடி வந்த மோகன் சினிமா வாய்ப்புக்காக அலைந்து உள்ளார். அவரது மனைவி கடந்த 2005 ஆம் ஆண்டு இறந்துவிட்டார். இதையடுத்து மோகன் திருப்பரங்குன்றம் கோவிலில் பிச்சை எடுத்த வந்திருக்கிறார். மேலும் கடந்த ஜூலை 31ஆம் தேதி ஆதரவற்ற நிலையில் அனாதையாக இறந்து கிடந்துள்ளார்.

இதை அடுத்து மதுரை மருத்துவமனையில் அவரை ஒப்படைத்துள்ளனர். அதன் பிறகு அவரது குடும்பத்தாரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மோகனுக்கு இரண்டு சகோதரர்கள் மற்றும் ஐந்து சகோதரிகள் இருந்தும் ஆதரவற்றோர் போல் நிர்கதியாக அவரது இறுதி நிமிடங்கள் இருந்திருக்கிறது.

மேலும் கமல், பாலா போன்ற பெரிய பிரபலங்களின் படங்களில் நடித்தும் அவருக்கு வாய்ப்பு இல்லாமல் போய் உள்ளது. அதுமட்டுமின்றி சினிமா அவரை கண்டுகொள்ளாமல் விட்டது தான் இந்த நிலைமைக்கு காரணமாக இருக்கிறது. சினிமாவில் நடித்த நடிகர்கள் இதே போல் பிச்சை எடுத்து  இறப்பது தொடர்கதையாக மாறி வருகிறது.