அட்லீக்கு அடிச்ச ஜாக்பாட்.. இந்திய சினிமாவே திரும்பி பார்க்கும் அளவுக்கு வர போகும் செய்தி

Atlee: கொடுக்குற தெய்வம் கூரையை பிச்சிகிட்டு கொடுக்கும் என்று சொல்லுவாங்க. அட்லி விஷயத்தில் வானமே பிளந்து விழும் அளவுக்கு அதிர்ஷ்டம் கொட்டப் போகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

ராஜா ராணி மூலம் அறிமுக இயக்குனராக தமிழ் சினிமா ரசிகர்களிடையே பரீட்சையமான அட்லியின் சினிமா வாழ்க்கை கண்ணிமைக்கும் நேரத்தில் உச்சிக்கு சென்று விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

இப்போது மிகப்பெரிய பட்ஜெட்டில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து படம் பண்ண இருக்கிறார். இந்த படத்தின் அப்டேட் வெளியாவதற்கு முன்பே சிறப்பான சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது.

அட்லீக்கு அடிச்ச ஜாக்பாட்

நேற்று இந்தியாவின் உயரிய விருதான தேசிய விருது 71 ஆம் ஆண்டுக்கான விருது பட்டியல் வெளியானது. இதில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு சிறந்த நடிகருக்கான விருது ஜவான் படத்திற்காக கொடுக்கப்பட்டிருக்கிறது.

33 வருடங்களாக பாலிவுட் சினிமாவில் கோலோச்சி இருக்கும் ஷாருக்கானுக்கு இதுதான் முதல் தேசிய விருது. இந்த அத்தனை புகழுக்கும் காரணம் ஜவான் படத்தின் இயக்குனர் அட்லி தான். இதனால் அடுத்த தேசிய விருதுக்கு அடித்தளம் போட இருக்கிறது இந்த பட குழு.

மீண்டும் அட்லீயுடன் இணைந்து படம் பண்ண ஷாருக்கான் முடிவெடுத்து இருக்கிறார். ஜவான் படம் கிட்டதட்ட 300 கோடி பட்ஜெட்டில் உருவாகி 1160 கோடி வசூல் செய்தது.

தற்போது அடுத்த படத்தை இதைவிட அதிக பட்ஜெட்டில் எடுக்க திட்டமிட்டு இருக்கிறார்கள் படத்தின் தயாரிப்பாளர்களான ஷாருக்கான் மற்றும் கௌரி கான். பட்ஜெட் எப்படி பல மடங்கு ஆகிறதோ அதே மாதிரி அட்லியின் சம்பளமும் இரட்டிப்பாக உயர இருக்கிறது.

அது மட்டுமில்லாமல் அட்லியின் படத்தில் நடிப்பதற்கு பாலிவுட் நடிகர்கள் விருப்பமும் தெரிவித்து வருகிறார்கள். போற போக்கை பார்த்தால் விஜய் இறங்கி வந்து அண்ணனுக்கு ஒரு படம் பண்ணு தம்பி என்று சொன்னால் கூட அட்லீயிடம் கால் சீட் இருக்காது போல.