சேரனின் சூப்பர் ஹிட் படத்தை நின்னுட்டே பார்த்த K பாலச்சந்தர்.. வியந்து பார்த்த திரை உலகம்

Cheran: இயக்குனர் சேரன் சமீபத்திய பேட்டியில் மறைந்த இயக்குனர் இமயம் பாலச்சந்தரை பார்த்து சினிமா உலகமே வியக்கும் விஷயத்தை பற்றி பேசி இருக்கிறார்.

பொற்காலம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, பாண்டவர் பூமி, ஆட்டோகிராப், மாயக்கண்ணாடி போன்ற அழகிய படைப்புகளை கொடுத்தவர் சேரன். இதில் ஆட்டோகிராப் திரைப்படம் தமிழ் சினிமாவில் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்று தான் சொல்ல வேண்டும்.

வியந்து பார்த்த திரை உலகம்

சொல்லப்படாத காதல், சேராத காதல், வெற்றிக்கு வித்திட்ட தோழி என மூன்று பெண்களை மையப்படுத்தி வெளியான இந்த ஆட்டோகிராப் படத்தை பார்த்து கண்ணீர் சிந்தாதவர்கள் இல்லை என்று சொல்லலாம்.

இந்த படம் ரிலீஸ் ஆகி ஒரு வாரத்தில் இயக்குனர் இமயம் இந்த படத்தை தியேட்டரில் பார்க்க ஆசைப்பட்டிருக்கிறார். தியேட்டர் ஓனருக்கு போன் பண்ணி கேட்டபோது அவர் சார் தியேட்டர் ஹவுஸ் ஃபுல் என்று சொன்னாராம்.

சரி நான் நின்னுகிட்டே படம் பாக்குறேன் அதுக்கு அனுமதி கொடுங்க என்று சொல்லி தியேட்டருக்கு வந்து நின்று கொண்டே படத்தை ரசித்துப் பார்த்திருக்கிறார்.

இயக்குனர் இமயம் பாலச்சந்தர் தான் ஒரு படைப்பாளி என்பதை தாண்டி மற்ற படைப்பாளிகளை பார்த்து அவர்களை ஊக்குவித்து படைப்புகளை கொண்டாடுபவர். இதை கண்டு ஒட்டுமொத்த திரையுலகமும் அவரை வியந்து பார்த்திருக்கிறது என்று சேரன் சொல்லி இருக்கிறார்.

பாலச்சந்தரை பொறுத்த வரைக்கும் அவருடைய படங்களில் கதாநாயகர்களை விட கதாநாயகிகள் தான் அதிகம் பேசுவார்கள். ஏனோதானோ என்று ஒரு பெண் கேரக்டரை தன் படத்தில் அவர் வைத்ததே கிடையாது. இதனால் தான் என்னவோ ஆட்டோகிராப் படம் அவருக்கு ரொம்பவே பிடித்துப் போய் இருக்கிறது.