சினிமா செய்திகள்

Kamal: ஆறு மாசத்துல 3 படமா.! 2024 இரண்டாம் பாதியை குத்தகைக்கு எடுத்த ஆண்டவர்

By Vijay · 08 மே 2024 · Updated 09 மே 2024
kamal-thug life

Kamal: இந்த வருடம் தொடங்கி நான்கு மாதங்கள் முடிந்து விட்டது. ஆனால் பெரிய அளவில் ஹிட் படங்கள் எதுவும் அமையவில்லை. இப்போது தான் சுந்தர் சி அரண்மனை 4 மூலம் கோலிவுட்டை மீட்டெடுத்துள்ளார்.

அதற்கேற்றார் போல் அடுத்தடுத்து டாப் ஹீரோக்களின் படங்கள் வெளிவர இருக்கிறது. அதில் கமல் நடிப்பில் மூன்று படங்கள் ரிலீஸ் ஆக இருப்பது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அந்த வகையில் ஜூன் மாதம் இவர் கேமியோ ரோலில் நடித்துள்ள கல்கி வெளிவர உள்ளது. நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாபச்சன் இணைந்துள்ள இப்படம் 600 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கிறது.

அதனாலேயே நிச்சயம் ஆயிரம் கோடி வசூலை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு அடுத்து பல வருடங்களாக இழுத்தடிக்கப்பட்டு வந்த இந்தியன் 2 வெளியாகிறது.

அடுத்தடுத்து வெளியாகும் கமலின் படங்கள்

இப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஜூலைக்கு தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு அடுத்ததாக மணிரத்தினம், கமல் கூட்டணியின் தக் லைஃப் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருகிறது.

முதலில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான் என பெரும் கூட்டணி இணைந்தது. ஆனால் சில கால தாமதத்தின் காரணமாக தற்போது அவர்கள் விலகிய நிலையில் சிம்பு இணைந்துள்ளார்.

அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூட வெளியாகி விட்டது. இப்படி ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கும் இப்படம் வரும் டிசம்பரில் வெளியாவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.

அந்த வகையில் 2024ம் ஆண்டின் இரண்டாம் பாதி ஆண்டவர் கையில் இருக்கிறது. மேலும் ஆறு மாதத்தில் அடுத்தடுத்து 3 படங்கள் வெளி வர இருப்பது ரசிகர்களை கொண்டாடவும் செய்துள்ளது.