கோலிவுட்டின் டாப் 10 ஹீரோக்கள் திருமணம் செய்த வயது தெரியுமா.? 21 வயதில் சிம்பு காதலியை தட்டி தூக்கிய தனுஷ்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள், படங்களில் நடித்துக் கொண்டே இருந்தாலும் அவர்களின் வாழ்க்கையை அறிந்து கொள்வதில் ரசிகர்கள் ஆர்வம் அடைவார்கள். அதிலும் முக்கியமாக அவர்கள் எப்போது திருமணம் செய்துகொள்ளப் போகிறார்கள், யாரைத் திருமணம் செய்துகொள்ளப் போகிறார்கள் என்றெல்லாம் ரசிகர்களுக்கு பல கேள்விகள் இருக்கும். அப்படி திருமணம் செய்து கொண்ட நடிகர்கள், எந்த வயதில் திருமணம் செய்து கொண்டார்கள் என்ற பதிவை தற்போது பார்க்கலாம்.

ரஜினிகாந்த் : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 1975 ஆம் ஆண்டு அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த லதாவை காதலித்து 1981 ஆம் ஆண்டு தனது 31வது வயதில் திருப்பதி தேவஸ்தானத்தில் ரஜினிகாந்த் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த், சவுந்தர்யா ரஜினிகாந்த் என இரு மகள்கள் உள்ளனர்.

கமலஹாசன் : 1978 ஆம் ஆண்டு தனது 24 வயதில், பரதநாட்டிய கலைஞரான வாணி கணபதியை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட நிலையில், பத்து வருடங்கள் கழித்து கமலஹாசன் விவாகரத்து செய்தார். அதன்பின் 1988 இல் தனது 34வது வயதில் நடிகை சரிகாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். சரிகாவும் விவாகரத்து பெற்ற நிலையில், இத்தம்பதிக்கு ஸ்ருதிஹாசன், அக்ஷரா ஹாசன் என இரு மகள்கள் உள்ளனர்.

விஜயகாந்த் : 35 வயதை கடந்தும், பல வருடங்களாக விஜயகாந்திற்கு திருமணம் நடைபெறவில்லை என பலரும் அவரை கேள்வி கேட்டு வந்தனர். அந்த தருவாயில் தனது 38வது வயதில், ஜனவரி 31ஆம் தேதி 1990 ஆம் ஆண்டு பிரேமலதா விஜயகாந்த்தை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு சண்முகப்பாண்டியன், விஜய பிரபாகரன் என இரு மகன்கள் உள்ளனர்.

அஜித் : நடிகர் அஜித், நடிகை ஷாலினியை காதலித்து வந்த நிலையில், தனது 29 வயதில் 2000ம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி சென்னையில் திருமணம் செய்து கொண்டனர். இத்தம்பதிக்கு ஆத்விக், அனுஷ்கா என்ற இரு பிள்ளைகள் உள்ளனர்.

விஜய் : நடிகர் விஜய் ஸ்ரீலங்கா நாட்டைச் சேர்ந்த சங்கீதா சோமலிங்கம் என்பவரை பெற்றோரின் சம்மதத்துடன் லண்டனில் சந்தித்து பேசி 1999 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி திருமணம் செய்துக்கொண்டார். தனது 25 வயதில் விஜய் திருமணம் செய்துகொண்ட நிலையில் இத்தம்பதிக்கு திவ்யா சாஷா,ஜேசன் சஞ்சய் என இரு பிள்ளைகள் உள்ளனர்.

சூர்யா : நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகாவை பல வருடங்கள் காதலித்து வந்த நிலையில், தந்தை சிவகுமாரின் சம்மதத்திற்காக நான்கு வருடங்கள் காத்திருந்து ஜோதிகாவை மணமுடித்தார். செப்டம்பர் 11 ஆம் தேதி 2006 ஆம் ஆண்டு நடிகை ஜோதிகாவை கரம் பிடித்த சூர்யாவிற்கு அப்போது 31 வயதாகும். இத்தம்பதிக்கு தியா, தேவ் என்ற இரு பிள்ளைகள் உள்ளனர்.

அதேபோல் தனுஷ் தனது 21 வயதிலும், விக்ரம் 26 வயதிலும், சிவகார்த்திகேயன் 25 வயதிலும், கார்த்தி 33 வயதிலும் திருமணம் செய்து தற்போது அனைவரும் நல்ல ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். இதில் கமல், தனுஷ், விக்ரம் போன்றவர்கள் மட்டும் விவாகரத்து பெற்று தனிமையில் சந்தோஷமாக இருந்து வருகிறார்கள்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →