2000 கோடி பிரம்மாண்ட வசூல்.. பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்து வைத்த அஜித்

இந்த ஆண்டு கோலிவுட் சினிமா உலகத்திற்கு ஒரு ஜாக்பாட் ஆண்டு என்றே சொல்லலாம். வெற்றிப்படம் ஒன்றைக் கொடுக்க பாலிவுட் உலகம் போரடிக் கொண்டிருக்கும் போது, தமிழ் சினிமா பல கோடிகளை அள்ளிக் கொண்டிருக்கிறது. இந்த வருடம் முடிவதற்குள்ளேயே தமிழ் சினிமா இதுவரை 2000 கோடி வரை வசூல் செய்து விட்டது.

இந்த வசூல் வேட்டைக்கு முதன் முதலில் பிள்ளையார் சுழி போட்டது நடிகர் அஜித் நடித்த வலிமை திரைப்படம் தான். இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் , போனிகபூர் தயாரிப்பில் வெளியான இந்த திரைப்படடம் கிட்டத்தட்ட 237 கோடி வசூல் செய்தது. இந்த படத்தில் வெற்றியை தொடர்ந்தது தான் மீண்டும் இதே கூட்டணியில் துணிவு படம் உருவாகி வருகிறது.

வலிமையை தொடர்ந்து வெளியான தளபதி விஜயின் பீஸ்ட் படமும் பாக்ஸ் ஆபிசில் வெற்றியடைந்தது. அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான இந்த படம் கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டது. விஜயின் வழக்கமான எந்த மசாலாக்களும் இல்லாமல் எதார்த்தமாக அமைந்து இருந்தாலும் உலக அளவில் பீஸ்ட் திரைப்படம் 250 கோடி வசூல் செய்தது.

உலக நாயகன் கமலஹாசனுக்கு பல வருடங்களுக்கு பிறகு கிடைத்த ஒரு வெற்றிப்படம் விக்ரம். இயக்குனர்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், சூர்யா, விஜய் சேதுபதி என்ற மாஸ் ஹீரோக்களை வைத்து உருவான இந்த படம் 600 கோடிக்கு மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸிலும் மாஸ் காட்டியது. மேலும் ஒட்டுமொத்த இந்திய சினிமா உலகையும் திரும்பி பார்க்க வைத்தது.

கோலிவுட்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்பான பொன்னியின் செல்வன் கடந்த வாரம் ரிலீஸ் ஆகி, வெற்றிநடை போட்டு கொண்டிருக்கிறது. பொன்னியின் செல்வனின் பட்ஜெட் இதுவரை எடுக்கப்பட்ட ஹைபட்ஜெட் திரைப்படங்களை விட அதிகம். ஆனால் படம் ரிலீஸ் ஆன பத்து நாட்களிலேயே பட்ஜெட்டை தாண்டிய வசூலை குவித்து விட்டது. இன்னும் திரையரங்குகளில் வசூல் செய்து கொண்டிருக்கிறது.

டாப் ஹீரோக்களின் படங்கள் மட்டுமில்லாமல் சிவகார்த்திகேயனின் டான், கார்த்தியின் விருமன், தனுஷின் திருச்சிற்றம்பலம், சிம்புவின் வெந்து தணிந்தது காடு, விஜய் சேதுபதியின் காத்துவாக்குல இரண்டு காதல் என இந்த வருடம் வெளியான மொத்த திரைப்படங்களும் எதிர்பார்த்ததை விட நன்றாகவே கல்லா கட்டியிருக்கின்றன.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →