சினிமா செய்திகள்

கமலை படாதபாடு படுத்தி ஒரே படத்தோடு எஸ்கேப் ஆன நடிகை.. உலக நாயகன் உல்டாவாக அடங்கி போன ஹீரோயின்

உலக நாயகன் கமலஹாசனை பாடாய்படுத்திய ஒரே ஹீரோயின்.

By Arun · 26 ஆக 2023 · Updated 10 மே 2025
kamal-cinemapettai

Kamal Movie Actress: பொதுவாக கமல் தான் எல்லா ஹீரோயினையும் படாத பாடுபடுத்தி எடுப்பார். குறிப்பாக முத்த காட்சியில் நடிகைகளை திணறடித்து விடுவார். அப்படிப்பட்ட உலக நாயகனுக்கு ஒரு நடிகை தண்ணி காட்டி இருக்கிறார். பல நடிகைகளை செஞ்சு விட்ட கமலை உல்டாவாக அடங்கிய ஹீரோயின் ஒருவர்,  ஒரே படத்தோடு தமிழ் சினிமாவிற்கு முழுக்க போட்டு விட்டார்.

இந்தியன் படத்தில் கமலுக்கு ஓவர் டார்ச்சர் கொடுத்த ஹீரோயின் தான் நடிகை ஊர்மிளா. சங்கர் இயக்கத்தில் சூப்பர் ஹிட் கொடுத்த இந்த படத்தில் கதாநாயகி மனிஷா கொய்ராலா உடன் செகண்ட் ஹீரோயினாக நடித்தவர் தான் இந்த ஊர்மிளா. அந்த ஒரு படத்தோடு தமிழ் சினிமாவில் இருந்து எஸ்கேப் ஆகிவிட்டார் ஊர்மிளா.

கமலை இந்தியன் படத்தில் ஜாக்கெட் தைப்பதில் இருந்து பாவாடை நாடா கோர்ப்பது வரை பாடாய் படுத்தி எடுத்தவர் இந்த ஊர்மிளா. செம க்யூட்டான நடிகையான இவர் இந்தியன் படத்திற்கு பிறகு தமிழ் பக்கம் தலை காட்டாமல் ஹிந்தி படங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தார்.

இவர் இந்தியில் சத்யா, ரங்கீலா, ஏக் ஹசீனா தீ, பூட் என வரிசையாக ஹிட் கொடுத்தவர். நடிகையாக மட்டுமல்லாமல் ஊர்மிளா சமீப காலமாக அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அதே சமயம் ஸ்ட்ராங்கான கேரக்டரில் நடித்தும் வருகிறார். சோசியல் மீடியாவில் ரொம்பவே ஆக்டிவாக இருக்கும் ஊர்மிளா தனது புகைப்படத்தையும் பதிவிட்டு கொண்டிருக்கிறார்.

இருப்பினும் இவர் இந்தியன் படத்தில் சப்னா கேரக்டரில் கமலை டார்ச்சர் செய்து ரசிகர்களை மகிழ்வித்தார். அதேபோன்று இன்னும் டாப் தமிழ் நடிகர்களுடன் ஊர்மிளா ஜோடி சேர்ந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் அந்தப் படத்திற்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு முழுக்கு போட்டு விட்டார்.

தனிப்பட்ட வாழ்க்கையை பொறுத்தவரை நடிகை ஊர்மிளா தன்னுடைய இளமைக் காலத்தில் எல்லாம் நடிப்பில் மட்டுமே ஆர்வம் செலுத்தி, தனது 42 வயதில் தான் காஷ்மீரை சேர்ந்த தொழிலதிபர் மொஹ்சின் அக்தர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.