சினிமா செய்திகள்

இந்தியன் 2 ரிலீசில் இருக்கும் சீக்ரெட்.. வொர்க் அவுட் ஆகுமா கமல், ஷங்கரின் மேஜிக்.?

By Vijay · 08 ஏப் 2024 · Updated 08 ஏப் 2024
sankar-kamal

Indian 2: வருடக்கணக்காக இந்தியன் தாத்தாவை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதோ அதோ என்று போக்கு காட்டி வந்த இந்தியன் 2 தற்போது ரிலீசுக்கு தயாராகி விட்டது.

அதன்படி கமல், ஷங்கர் கூட்டணி இப்போது ஜூன் மாதத்தை குறி வைத்துள்ளனர். சமீபத்தில் இதன் அறிவிப்பு வெளிவந்த நிலையில் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

கமல், ஷங்கரின் மேஜிக்

இந்நிலையில் ஜூன் மாதத்தை இவர்கள் தேர்ந்தெடுத்ததற்கு பின்னால் ஒரு காரணம் இருக்கிறது. அதாவது நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆண்டவர் விக்ரம் மூலம் இன்டஸ்ட்ரியல் ஹிட் கொடுத்தார்.

அதேபோல் அவருடைய தசாவதாரமும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இந்த இரண்டு படங்களும் ஜூன் மாதத்தில் தான் வெளிவந்தது.

மேலும் ஷங்கரின் சிவாஜி, அந்நியன் போன்ற படங்களும் ஜூன் மாதத்தில் வெளிவந்து வசூல் வேட்டை நடத்தியது. அதனாலேயே இந்தியன் 2 படத்தையும் அவர்கள் ஜூன் மாதத்தில் வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.

இந்த சென்டிமென்ட் எந்த அளவுக்கு அவர்களுக்கு கை கொடுக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் கமல், ஷங்கரின் மேஜிக் நிச்சயம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட் என்பதில் சந்தேகம் இல்லை.