சினிமா செய்திகள்

இந்தியன் 2 படத்தில் சூதனமான உதயநிதி.. மொத்தமாக இடி விழுந்தது போல் நொறுங்கிய ஷங்கர்

இந்தியன் 3 படத்திற்கு இயக்குனர் ஷங்கருக்கு அதிர்ச்சியை கொடுத்த உதயநிதி.

By Vijay · 04 ஆக 2023 · Updated 10 மே 2025
udhayanidhi-shankar

Director Shankar and Udhayanidhi: இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 படப்பிடிப்பு பல வருடங்களின் போராட்டங்களுக்குப் பிறகு தற்போது படப்பிடிப்பு ஒரு வழியாக சுமூகமாக முடிவடைந்து விட்டது. மேலும் தற்போதைய காலத்திற்கு ஏற்ப இப்படம் எந்த மாதிரியான கதையை வைத்து வருகிறது என்பதை பார்க்க ரசிகர்கள் அனைவரும் ஆவலாக எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

அந்த வகையில் இதுவரை எடுத்துள்ள காட்சிகள் மட்டுமே 5 மணி நேரத்திற்கு மேலாக வருகிறதாம். அதனால் இந்தியன் 2 படத்திற்கு தேவையான காட்சிகளை மட்டும் வைத்துவிட்டு மீதமுள்ள காட்சிகளை எடிட் செய்து இந்தியன் 3 என்று பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மொத்த படக்குழுவும் சேர்ந்து தீர்மானித்து வைத்திருந்தார்கள்.

அதற்காக கமலிடம் இன்னும் 20 நாட்கள் கால் சீட் வாங்கி படபிடிப்பை ஒரேடியாக முடித்துக் கொள்ளலாம் என்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. முதலில் இதற்கு அனுமதி கொடுத்த உதயநிதி தற்போது கொஞ்சம் பின்வாங்கியுள்ளார். அதாவது இந்தியன் 2 படத்தை முதலில் வெளியிடுங்கள். படம் ஹிட் ஆனால் அடுத்த பாகத்தைப் பற்றி பேசலாம் என ஷங்கரிடம் சொல்லி வாயை அடைத்து விட்டார்.

இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சங்கர் அதிர்ந்து போய் விட்டார். உதயநிதி இப்படி சொல்வதைப் பார்த்தால் என் படத்தின் மீதும், என் மேலேயும் நம்பிக்கை இல்லாமல் தான் இப்படி ஒரு முடிவை எடுத்து இருக்கிறார் என்று நினைத்து மொத்தமாக இடி விழுந்தது போல் நொறுங்கி இருக்கிறாராம். இதற்கெல்லாம் சேர்த்து மொத்தமாக பதிலடி கொடுக்கலாம் என்று ரிலீஸ் தேதிக்கு காத்துக்கொண்டு வருகிறார்.

அதன் பின் தைரியமாக வட்டியும் முதலுமாக சேர்த்து உதயநிதியிடம் பேசிக் கொள்ளலாம் என்று இருக்கிறார். கண்டிப்பாக கமல் மற்றும் இயக்குனர் சங்கர் தயாரிப்பில் வரப்போகும் இந்தியன் 2 பிரம்மாண்டமாக தான் இருக்கப் போகிறது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் தயாரிப்பாளராக உஷாரா இருக்க வேண்டும் என்று உதயநிதி இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறார்.

முக்கியமாக உதயநிதி இப்படி சொன்னதற்கு காரணம் இப்படத்திற்கு போட்ட பட்ஜெட்டையும் தாண்டி அதிக செலவாகி உள்ளதால் ஏற்பட்ட பயம் தான். போட்ட பணத்தை எடுத்த பிறகு அடுத்த பாகத்தை பற்றி நினைக்கலாம் என்ற முடிவெடுத்து இருக்கிறார். எது எப்படி இருந்தாலும் இந்தியன் 2 கண்டிப்பாக வெற்றி அடையும்.