வரலாற்றை திருப்பிப் போட தயாரான 5 ஹீரோக்கள்.. ரூட்டை மாற்றுவாரா தளபதி?

Thalapathy Vijay: தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்கள் பலரும் இப்போது ஒரே மாதிரியான கதைகளை தேர்ந்தெடுப்பதை கைவிட்டு இருக்கிறார்கள். இதுவரை நடிக்காத கதை அம்சங்களை தேர்ந்தெடுத்து நடத்தி வருகிறார்கள். அதில் ஒன்றுதான் வரலாற்று கதைகளை படமாக்குவது. இதில் தளபதி விஜய் மட்டும் இன்னும் ரூட்டை மாற்றாமல் ஒரே மாதிரி நடித்து வருகிறார் என்ற ஏக்கம் சினிமா ரசிகர்களுக்கு இருக்கிறது. சமீபத்தில் வரலாற்று கதையை கையில் எடுத்திருக்கும் 5 ஹீரோக்களை பற்றி பார்க்கலாம்.

வரலாற்று படங்களில் நடிக்கும் ஹீரோக்கள்

சூர்யா: சூர்யா நடிகர்கள் கமல் மற்றும் விக்ரமை போன்று வித்தியாசமான கதைகளங்களில் நடிக்க வேண்டும் என நினைப்பவர். அதைப் போன்ற படங்களில் தான் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது சூர்யா நடித்து கொண்டிருக்கும் கங்குவா படம் வரலாற்று கதையை மையமாகக் கொண்டுதான் எடுக்கப்பட்டு வருகிறது. பிரம்மாண்டமாக பான் இந்தியா படமாக இது ரிலீஸ் ஆக இருக்கிறது.

தனுஷ்: இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துக் கொண்டிருக்கும் கேப்டன் மில்லர் படமும் வரலாற்று கதையை மையமாகக் கொண்டதுதான். இந்த படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். வரும் பொங்கல் தினத்தன்று இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதை தொடர்ந்து தனுஷ் இயக்கும் அவருடைய ஐம்பதாவது படம் கூட வரலாற்று கதையை மையமாகக் கொண்டது என சொல்லப்படுகிறது.

சிம்பு: இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு தன்னுடைய 48வது படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை கமலஹாசன் தயாரிக்கிறார். இதுவும் வரலாற்று கதை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் படம். வரும் பிப்ரவரி மாதம் படத்தின் போட்டோ ஷூட் நடக்க இருக்கிறது. இதைத் தொடர்ந்து ஏப்ரல் மாதம் இந்த படத்தின் சூட்டிங் ஆரம்பம் ஆகிறது.

விக்ரம்: நடிகர் விக்ரம் ஏற்கனவே பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் ஆகவே வாழ்ந்து விட்டார். அதை தொடர்ந்து தற்போது இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் என்னும் வரலாற்றுப் படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். விரைவில் விக்ரமின் நடிப்பில் சூர்ய புத்திர கர்ணன் படத்தையும் எதிர்பார்க்கலாம்.

அஜித்: அஜித் குமார் இப்போது விடாமுயற்சி படப்பிடிப்பில் படு பிஸியாக இருக்கிறார். இதைத்தொடர்ந்து தன்னுடைய 63 வது படத்திற்காக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் இணைய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. விரைவில் அஜித் மற்றும் வெற்றிமாறன் இணைய இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இது வரலாற்று கதை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் திரைப்படமாக அமையப் போகிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →