சினிமா செய்திகள்

ரிலீஸ் தேதியுடன் அனல் பறக்க வெளிவந்த பொன்னியின் செல்வன் போஸ்டர்ஸ்.. கதிகலங்கி இணையதளம்

By Vijay · 02 மார்ச் 2022 · Updated 07 மே 2025
ps1-posters

தமிழ் சினிமாவே எதிர்பார்த்து காத்திருக்க கூடிய திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படத்தில் தமிழ் நட்சத்திரங்களான விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி மற்றும் விக்ரம் பிரபு உட்பட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தை பிரமாண்டமாக லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது.

மணிரத்னம் இயக்கியுள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.இப்படத்தில் ஒவ்வொரு நடிகருக்கும் தனிப்பட்ட கதாபாத்திரத்தை மணிரத்தினம் கொடுத்துள்ளார். அதற்கு தகுந்தார்போல் அந்தந்த நடிகர்கள் தங்களது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி உள்ளனர்.

நீண்ட நாட்களாக படப்பிடிப்பு நடத்தி வந்த நிலையில் இப்படத்தினை எப்போது படக்குழுவினர் வெளியிடுவார் என ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். தற்போது படக்குழுவினர் இப்படத்தினை ’30-9-2022′ அன்று வெளியிடுவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

தற்போது இப்படத்தில் நடித்த நடிகர்களின் கதாபாத்திரத்தின் புகைப்படத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

ponniyin selvan
ponniyin selvan